அந்தோ பறிபோனதே உரிமை! அற்ப அரசியலுக்காக காவிரி வழக்கில் பெரும் பின்னடவை சந்தித்த தமிழகம்!!
அற்ப அரசியலுக்காக காவிரி உரிமையை பறிகொடுத்து நிற்கிறது தமிழகம்.
Recommended Video

சென்னை: தமிழகத்தின் நலன் என்பதை கவனத்தில் கொள்ளாமல் அற்ப அரசியல் பார்வையுடன் காவிரி வழக்கை அரசுகள் அணுகியதால்தான் இன்று உரிமையை பறிகொடுத்து பெரும் பின்னடைவை சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
நதிநீர் பிரச்சனையை மாநிலத்தின் உயிர் நாடி விவகாரத்தை கருதித்தான் அரசுகள் அணுகுகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரையில் அரசியல் கண்ணோட்டத்துடனேயே அணுகுகின்றனர்.

காவிரி நதிநீர் வழக்கில் கர்நாடகா அரசு தொடர்ந்து நாரிமன் போன்ற மூத்த வழக்கறிஞர்களை அமர்த்தி இன்று கூடுதலாகவே பெற்றுக் கொண்டு விட்டது. மூத்த வழக்கறிஞர் பராசுரன் போன்றோர் தமிழகத்துக்கு வாதாடி வந்தனர்.
ஆனால் திமுக ஆட்சிக் காலத்தில் போட்ட வக்கீல்களாயிற்றே என அரசியல் இதில் விளையாடியது. இதன்விளைவாகத்தான் நவநீதகிருஷ்ணன் வகையறாக்களை தமிழக வழக்கறிஞர்களாக உச்சநீதிமன்றத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறோம்.
தமிழகத்துக்கான நீரை குறைத்துக் கொள்ளுங்கள் என உச்சநீதிமன்றம் ஒருமுறை விசாரணையில் கேட்கிறது. தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞரோ கொதித்தெழ வேண்டிய நேரத்தில் மவுனியாக அமர்ந்து கொண்டிருந்தார்.
இத்தகைய பேரவலத்தால்தான் இன்று உள்ளதும் போச்சு என கதற வேண்டிய நிலையில் தமிழக விவசாயிகள் உள்ளனர் என்பதுதான் யதார்த்தம்.












Click it and Unblock the Notifications