வண்டலூர் பூங்காவில் மதில் சுவர் இடிந்து தப்பியோடிய புலி- சென்னையில் பெரும் பீதி!!
சென்னை: சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மதில் சுவர் இடிந்ததால் புலி ஒன்று தப்பி வெளியே ஓடிவிட்டது. இதனால் சென்னையில் பெரும் அச்சமும் பீதியும் ஏற்பட்டுள்ளது.
சென்னை வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு சிங்கம், புலி, கரடி, சிறுத்தை, மான், யானை உள்ளிட்ட விலங்குகள், பறவைகள் உள்ளன. தற்போது தமிழகத்தில் கனமழை பெய்து வரும் சூழ்நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவை சுற்றி நேற்று காலை பரவலாக மழை பெய்தது.

இங்கு புலிகள் மற்றும் புலி குட்டிகள் உலாவிடம் அருகே வண்டலூர் மலைப் பகுதி உள்ளது. அப் பகுதியில் 7 அடி அகலமும் 150 அடி நீளமும் கொண்ட சுற்றுசுவர் கட்டப்பட்டுள்ளது. இந்த சுற்றுச் சுவரின் ஒருபகுதி நேற்று காலை திடீரென விழுந்தது.

இதனை கண்ட பூங்கா ஊழியர்கள் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அப்போது புலிகள் இருக்கின்றனவா? என்பதை உறுதி செய்ய பூங்கா ஊழியர்கள் இறைச்சியை வீசிப் பார்த்தனர். ஆனால் அங்கிருந்த 5 புலிகளில் ஒன்று கூட இறைச்சியை எடுக்க வரவில்லை.

இதனால் சுற்றுச் சுவர் இடிந்த நேரத்தில் புலிகள் அங்கிருந்து தப்பி அருகே உள்ள காடுகளுக்குள் ஓடிவிட்டது தெரியவந்தது. புலிகள் தப்பியதால் அதிர்ச்சி அடைந்த பூங்கா நிர்வாகம் வனப்பகுதியில் புலிகளைத் தேடும் நடவடிக்கையை மேற்கொண்டது.

இந்த நிலையில் இன்று காலை தப்பி புலிகளில் 4 பிடிபட்டு மீண்டும் கூண்டுக்குள் அடைக்கப்பட்டுவிட்டதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் மாயமான இன்னொரு புலியைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஒருநாள் ஆகியும் புலி சிக்காததால் சென்னை மாநகரில் பீதி ஏற்பட்டுள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications