லோக்சபா தேர்தல்: ஜெயலலிதாவின் தேர்தல் பிரசார பயணத்தில் மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் பிரசார பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

நாளை மறுநாள் சிதம்பரத்தில் கிழவீதிக்கு பதில், பைபாஸ் சாலையில் ஜெயலலிதா பிரசாரம் செய்வார். வரும் 13ஆம் தேதி ஈரோடு சித்தோட்டிற்கு பதில் காங்கேயத்திலும், 15ஆம் தேதி கள்ளக்குறிச்சிக்கு பதில், தூத்துக்குடியிலும், 16ஆம் தேதி கள்ளக்குறிச்சியிலும், 18ஆம் தேதி திருவாண்ணாமலை தொகுதியிலும் ஜெயலலிதா பிரசாரம் செய்வார்.

அதேபோல், 19ஆம் தேதி திருச்சிக்கு பதில் தென்காசி, சங்கரன்கோவிலிலும், 23ஆம் தேதி புதுச்சேரிக்கு பதில் கடலுர், விழுப்புரத்திலும், 25ஆம் தேதி திண்டுக்கல், தேனியிலும், 28ஆம் தேதி மதுரையிலும், 29ஆம் தேதி ராமநாதபுரத்திலும் முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரம் செய்வார்.

jaya

ஏப்ரல் 1ஆம் தேதி புதுச்சேரிலும், 3ஆம் தேதி நாமக்கல், சேலத்திலும், 5ஆம் தேதி தஞ்சை, திருச்சியிலும், 8ஆம் தேதி பொள்ளாச்சி, கோவையிலும், 10ஆம் தேதி நீலகிரி தேரம்பாளையத்திலும், 11ஆம் நெல்லையிலும், 13ஆம் கரூர், பெரம்பலூரிலும், 15ஆம் தேதி ஆரணி, வேலூர் தொகுதிகளிலும் பிரசாரம் செய்ய உள்ளார்.

ஏப்ரல் 17ஆம் தேதி கிருஷணகிரி, தர்மபுரியிலும், 19ஆம் தேதி அரக்கோணம், திருவள்ளூர், ஆவடியிலும், 20ஆம் தேதி மத்திய சென்னை, வட சென்னையிலும், ஏப்ரல் 21ஆம் தேதி ஆலந்தூர், தென் சென்னையிலும் முதல்வர் ஜெயலலிதா பிரசாரம் செய்வார்'' என கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+