ஹோம்வொர்க் செய்யவில்லை.. மாணவனின் கையை அடித்து நொறுக்கிய தலைமை ஆசிரியை
வீட்டுப்பாடம் செய்யாத மாணவனை தலைமை ஆசிரியை சரமாரியாக தாக்கியுள்ளார்.
மதுராந்தகம்: வீட்டு பாடம் செய்யாத மாணவனின் கையை தலைமை ஆசிரியை விஜயா அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலைப்பாளையம் கிராமத்தில் அரசினர் நடுநிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இதில் ஜீவரத்தினம் என்ற மாணவன் 5-ம் வகுப்பு படித்து வருகிறான்.

இந்நிலையில் ஜீவரத்தினம் என்ற மாணவன் வீட்டு பாடம் செய்யாமல் பள்ளிக்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பள்ளி தலைமையாசிரியை விஜயா, மாணவனை அழைத்து பிரம்பால் சரமாரியாக அடித்துள்ளார். இதில் வலி பொறுக்க முடியாமல் அலறிதுடித்தான். பள்ளி தலைமை ஆசிரியை விஜயா அடித்ததால், மாணவன் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதையடுத்து உடனடியாக அரசு மருத்துவமனையில் மாணவன் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆசிரியர் தினமான இன்று, மாணவனை பள்ளி தலைமை ஆசிரியரே கையை அடித்து நொறுக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications