கதிராமங்கலத்தில் கறுப்புத் துணியால் வாயைக் கட்டி சிறுவர் சிறுமியர் போராட்டம்… மனம் இறங்குமா அரசு
ஓஎன்ஜிசிக்கு எதிராக கதிராமங்கலம் கிராமத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தில் சிறுவர் சிறுமியர் பள்ளிச் சீருடையுடன் கறுப்புத் துணியை வாயில் கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை: கதிராமங்கலத்தில் சிறுவர் சிறுமியர் வாயில் கறுப்புத் துணியைக் கட்டிக் கொண்டு ஓஎன்ஜிசிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் 11 இடங்களில் எண்ணெய் கிணறு அமைத்து கச்சா எண்ணெய் எடுக்கிறது ஓஎன்ஜிசி. கடந்த 30 ஆம் தேதி விளைநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள எண்ணெய் குழாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியேறியது.
இதனால், பதற்றமடைந்த கிராமத்து மக்கள் அனைவரும் சம்பவ இடத்தில் குவிந்து போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். மேலும் 9 பேரை கைது செய்தனர்.

தொடரும் கடையடைப்பு
இதையடுத்து, கைது செய்தவர்களை விடுவிக்க கோரி கதிராமங்கலத்தில் வணிகர்கள் வெள்ளிக்கிழமை முதல் முழுகடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் விடுவிக்கும் வரை போராட்டம் தொடரும் என வணிகர்கள் அறிவித்துள்ளனர்.
மாணவர்கள் ஆதரவு
இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி போராட்டத்தில் ஈடுபட்டனர். கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புக்களைப் புறக்கணித்து போராட்டம் நடத்தினர். அப்போது ஓஎன்ஜிசிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
கறுப்புத் துணி கட்டி சிறுவர் போராட்டம்
பள்ளியில் படிக்கும் சிறுவர் சிறுமியரும் கதிராமங்கலம் போராட்டத்திற்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளனர். பள்ளிச் சீருடையோடு அவர்கள் வாயில் கருப்பு துணி கட்டிக் கொண்டு வீட்டில் இருந்து பேரணியாக புறப்பட்டு ஊர் எல்லைக்கு வந்து போராட்டத்தில் பங்கேற்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications