சாலை விதிகளை மீறும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் – 40 சதவீத விபத்துக்கள் இவர்களால்தான்!
சென்னை: பள்ளி, கல்லூரி மாணவர்கள் சாலை விதிகளை மீறுவதால் அவர்கள் சாலை விபத்துகளில் சிக்கி இறக்கும் சம்பவம் தினமும் நடக்கின்றது.
சென்னையில் கடந்த 2014ஆம் ஆண்டு உயிர் இழப்புகளை ஏற்படுத்தும் வகையில் 1083 சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளன.
இந்த விபத்துகள் மூலம் 1118 பேர் இறந்துள்ளனர். மொத்த விபத்தில் ஆண்டுக்கு 8.3 சதவீத விபத்துகள் இரு சக்கர வாகனங்களால் ஏற்படுகிறது.

மோட்டார் வாகனச் சட்டம்:
இரு சக்கர வாகனங்களால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்கும் வகையில் வாகன ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுபவர்கள் மீது மோட்டார் வாகனச் சட்டம் 181ஆவது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து ரூபய் 500 அபராதம் வசூலிக்கப்படுகிறது. இதில் 2013 ஆம் ஆண்டு 7180 வழக்குப் பதிவுச் செய்யப்பட்டன.
முக்கால்வாசி பள்ளி மாணவர்கள்:
சென்னையில் இரு சக்கர வாகன விபத்துக்களில் இறப்பவர்களில் 20இல் இருந்து 30 சதவீதம் வரை பள்ளி, கல்லூரி மாணவர்கள் என காவல்துறை புள்ளி விவரம் கூறுகிறது.
கியருடன் கூடவே கூடாது:
16 வயது நிரம்பியவர்கள் கியர் இல்லாத இரு சக்கர வாகனங்களையும், 18 வயது நிரம்பியவர்கள்தான் கியருடன் கூடிய வாகனங்களையும் ஓட்ட வேண்டும் என மோட்டார் வாகனச் சட்டம் கூறுகிறது.
சர்வசாதாரண புழக்கம்:
இதில் பள்ளி மாணவர்கள் 16 வயதுக்கு உட்பட்டவராக இருப்பதால் அவர்கள் வாகன ஓட்டுநர் உரிமம் பெற தகுதியற்றவர்களாக இருக்கிறார்கள். ஆனால் சென்னையில் பள்ளி மாணவர்கள் இரு சக்கர வாகனங்களை சர்வ சாதாரணமாக ஓட்டிச் செல்வதைக் காண முடிகிறது.
விழிப்புணர்வு பிரச்சாரங்கள்:
இதைக் கருத்தில் கொண்டு சென்னை பெருநகர காவல்துறை பள்ளி மாணவர்கள் வாகனங்களை ஓட்டாமல் இருப்பதற்கு பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை செய்கிறது. குறிப்பாக பள்ளிகள்தோறும் மாணவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுவது தவறு என்று அறிவுறுத்தி விழிப்புணர்வு வகுப்புகளை நடத்துகிறது.
கண்காணிக்கும் போலீசார்:
இதேபோல் பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கும் போதும் முடியும்போதும் அந்தப் பகுதிகளில் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். அப்போது இரு சக்கர வாகனங்களில் செல்லும் பள்ளி மாணவர்களைத் தடுத்து நிறுத்துவதோடு அவர்களின் பெற்றோரை அழைத்து போலீஸார் எச்சரிக்கின்றனர்.
பள்ளி நிர்வாகங்கள் வலியுறுத்த கோரிக்கை:
மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் வருவதை பள்ளிகள் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக்கூடாது இது தொடர்பாக பெற்றோரிடம் பள்ளி நிர்வாகங்கள் வலியுறுத்த வேண்டும் என காவல்துறை அறிவுறுத்திவருகிறது.












Click it and Unblock the Notifications