கொளுத்தும் வெயில்... புதுவையில் பள்ளி கோடை விடுமுறை நீட்டிப்பு!
புதுவை: வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் புதுவையில் பள்ளிகளின் கோடை விடுமுறை நீட்டிக்கப் பட்டுள்ளதாக அமைச்சர் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
தமிழகம் மற்றும் புதுவையில் பள்ளிக்கூடங்களுக்கு தற்போது கோடைவிடுமுறை விடப்படுள்ளது. மீண்டும் பள்ளிகள் வரும் ஜூன் 3ம் தேதி திறக்கப் படும் என அறிவிக்கப் பட்டிருந்தது.
இந்நிலையில், இந்தியாவின் பல மாநிலங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. பகலில் வெளியில் தலை காட்ட இயலாத அளவிற்கும் வெயில் அடிக்கிறது. இதன் காரணமாக பள்ளிகளின் கோடை விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து புதுவையில் பள்ளிகளின் கோடை விடுமுறை நீட்டிக்கப் பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக புதுவை கல்வி அமைச்சர் தியாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :-
கோடை வெயிலின் தாக்கம் காரணமாக மாணவர்கள் பள்ளிக்கு சென்று கல்வி பயில்வதில் இன்னல் ஏற்படும் என அரசு கருதுவதால் மாணவர்களின் நலன்கருதி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறப்பது தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. அதன்படி அனைத்து பள்ளிகளும் ஜூன் மாதம் 12-ந்தேதியன்று திறக்கப்படும்.
மேலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டத்தை உரிய காலத்தில் நடத்திட வேண்டியுள்ளதால் பள்ளிகள் சிறப்புப்பாட வகுப்புகள் நடத்துவதற்கு தடை ஏதும் இல்லை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
புதுவையைப் போலவே தமிழகத்திலும் வெயில் அதிகமாகவே உள்ளது. எனவே, மாணவர்கள் நலன் கருதி தமிழகத்திலும் பள்ளிகளின் கோடை விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications