பள்ளி வேன் கவிழ்ந்து மாணவர்கள் காயம்: குடிகார டிரைவர் கைது
நெல்லை: நெல்லை அருகே வேன் டிரைவர் குடிபோதையில் வாகனத்தை ஓட்டியதில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் 11 பேர் படுகாயமடைந்தனர்.
நெல்லையை அடுத்துள்ள தாழையூத்தில் உள்ளது ஒரு தனியார் பள்ளி. இங்கு சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் மாலை பள்ளி முடிந்து கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகளை வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
பள்ளி வேனை பாலடை பகுதியை சேர்ந்த டிரைவர் மாரியப்பன் ஓட்டினார். கங்கைகொண்டான் சிப்காட் அருகே செல்லும்போது வேன் நிலைதடுமாற தொடங்கியதால் வேனில் இருந்த மாணவ, மாணவிகள் அலற தொடங்கினர்.
நிலை தடுமாறி சென்ற வேன் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த ஆலடிபட்டியை சேர்ந்த 11 மாணவ, மாணவிகள் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் வேனில் இருந்த மாணவர்களின் பெற்றோர் வேன் டிரைவர் போதையில் இருந்ததாகவும், அதனால் தான் விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்து கங்கைகொண்டான் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தாழையூத்து டிஎஸ்பி நடராஜன் தலைமையிலான போலீசார் விரைந்து பேச்சு வார்த்தை நடத்தினர். போதையில் இருந்ததாக கூறப்பட்ட வேன் டிரைவர் மாரியப்பன் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications