கோடை விடுமுறைக்குப்பின் தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறப்பு!
சென்னை: தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பின் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன.
தமிழ்நாட்டில் 35 ஆயிரத்து 200 தொடக்கப்பள்ளிகளும், 10 ஆயிரம் நடுநிலைப்பள்ளிகளும், 5 ஆயிரத்து 700 உயர்நிலைப்பள்ளிகளும், 6 ஆயிரம் மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன. இந்த பள்ளிக்கூடங்களில் 6 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். 1 கோடியே 50 லட்சம் மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள்.
இதில் தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகள் அனைத்தும் கடந்த ஏப்ரல் மாதம் 30-ந்தேதி வரை நடந்தது. அதன் பின்னர் கோடை விடுமுறை விடப்பட்டது. உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் அனைத்தும் கடந்த ஏப்ரல் மாதம் 23-ந்தேதி முடிவடைந்து விடுமுறை விடப்பட்டன.

பள்ளிகள் திறப்பு
தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்கள் அனைத்தும் கோடை விடுமுறை முடிந்து இன்று திறக்கப்பட்டன. பிளஸ்-1 வகுப்புகள் மட்டும் ஜூன் 16-ந்தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலவச பாடப்புத்தகங்கள்
பள்ளிகள் திறக்கும் நிலையில், அரசின் விலையில்லாப் பாட புத்தகங்கள், குறிப்பேடுகள் மற்றும் சீருடைகள் உடடினயாக வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

மடிக்கணினி, மிதிவண்டி
மேலும், மடிக்கணினி, மிதிவண்டி, உதவித் தொகை உள்ளிட்ட அரசின் சலுகைகள் மாணவர்களுக்கு உடடினயாக கிடைக்கப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இலவச பஸ்பாஸ்
இதேபோல், மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச பேருந்து அட்டையின் காலம் ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

தேர்ச்சிவிகிதம்
இந்தக் கல்வி ஆண்டில் 10 மற்றும் 12 வகுப்புகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, பள்ளிகள் தொடங்கிய நாட்களிலிருந்தே கவனம் செலுத்த வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கல்வி உரிமைச் சட்டம்
கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுப்பதை கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகள் பெரும்பாலும், இம்மாதம் 4 மற்றும் 5ம் தேதி திறக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் இன்று திறப்பு.. இன்றே மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க ஏற்பாடு! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications