விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு இல்லை.. ஏப். 25ல் ஸ்கூல் திறந்திருக்கும்.. செங்கோட்டையன் கறார்
விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் 25ம் தேதி நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தில் தமிழக அரசு பங்கேற்காது என்று கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஈரோடு: விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் 25ம் தேதி நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்தின் போது பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்று கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள், தொழிற்சங்கங்கள், காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் சார்பில் ஏப்ரல் 25-ந் தேதி போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

லாரிகள் ஓடாது
இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு அளித்துள்ளது. மேலும் மணல் லாரிகளும் ஓடாது என மணல் லாரி உரிமையாளர்கள் சங்கமும் அறிவித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் எந்த லாரிகளும் 25ம் தேதி ஓடாது.

சினிமா கிடையாது
அதே போன்று சினிமா காட்சிகளும் ஏப்ரல் 25ம் தேதியன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவாக அன்றைய ஒரு நாள் மட்டும் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படுகிறது.

கடைகள் இருக்காது
முழுஅடைப்பிற்கு ஆதரவளிப்பதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் விக்ரமராஜா அறிவித்தார். இதே போன்று சென்னை கோயம்பேடு வியாபாரிகள் சங்கமும் முழு அடைப்பிற்கு அதரவு தெரிவித்துள்ளது.

ஸ்கூல் இருக்கும்
இந்நிலையில், தமிழகத்தில் நடைபெறும் முழு அடைப்பில் அரசு பங்கேற்காது என்று ஈரோட்டில் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். மேலும், அன்று அனைத்துப் பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications