என்ன எப்ப பார்த்தாலும் வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக்: கணவன் திட்டியதால் புதுப்பெண் தற்கொலை
கோவை:கோவையில் எப்பொழுது பார்த்தாலும் வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் பயன்படுத்தியதற்காக கணவன் திட்டியதால் புதிதாக திருமணம் ஆன பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த அபர்ணா(20) என்பவருக்கும் கோவை கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த குமார் என்ற லாரி டிரைவருக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றுள்ளது. குமார் வேலை விஷயமாக வெளியே சென்றுவிடுவார். இந்நிலையில் அபர்ணா எப்பொழுது பார்த்தாலும் வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக்கை பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் குமார் திங்கட்கிழமை தனது மனைவியை திட்டியுள்ளார். என்ன எப்பொழுது பார்த்தாலும் வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக்கிலேயே இருக்கிறாய் என்று திட்டியதுடன் அவரின் செல்போனையும் பறித்து வைத்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அபர்ணா வேறு ஒரு செல்போன் மூலம் தனது அண்ணனுக்கு போன் செய்து நடந்தது பற்றி தெரிவித்துள்ளார். அதன் பிறகு அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டார். குடும்பத்தார் கதவை தட்டியும் அவர் திறக்கவில்லை.
இதையடுத்து குமார் கதவை உடைத்து பார்த்தபோது அபர்ணா தனது துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. குமார் அபர்ணாவை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மனைவி இறந்த சோகத்தில் குமார் வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றார். அவரை உறவினர்கள் தடுத்து நிறுத்தி காப்பாற்றினர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications