திமுக கூட்டணியில் இணைந்தது எஸ்டிபிஐ - கருணாநிதியை சந்தித்த தெகலான் பாகவி அறிவிப்பு
சென்னை: சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியுடன் இணைந்து எஸ்.டி.பி.ஐ. கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹக்லான் பாகவி கூறியுள்ளார்.
எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹக்லான் பாகவி, மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன் மற்றும் மாநில துணைத் தலைவர்கள் முகமது முபாரக், அம்ஜத் பாஷா ஆகியோர் அடங்கிய குழு இன்று சென்னை கோபாலபுரத்தில் கருணாநிதியை சந்தித்தனர். அப்போது கூட்டணியை உறுதி செய்தனர். இந்த சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நடந்தது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தெஹக்லான் பாகவி, திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணியுடன் எஸ்.டி.பி.ஐ கட்சி இணைந்து சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறது. ஏற்கனவே,எங்களது நிலைப்பாடுகள் குறித்து அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலினை இரண்டு முறை சந்தித்து நாங்கள் பேசியுள்ளோம். அதன்படி கூட்டணியை இன்று உறுதி செய்துள்ளோம் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி இறைவன் நாடினால் நிச்சயம் வெற்றிபெறும். இந்த கூட்டணியில் மதசார்பற்ற கட்சிகள் இணைந்து வலுவான கூட்டணியாக மாற்ற முன்வர வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
அப்போது இந்த கூட்டணியில் மமக போன்ற கட்சிகள் இருக்கும் நிலையில் தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் வராதா என செய்தியாளர்கள் கேட்டபோது; அவ்வாறான பிரச்சினைகள் எழ வாய்ப்பில்லை என்று கூறினார்.
எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ கட்சி போட்டியிடுகிறது என செய்தியாளர்கள் கேட்டபோது, அதுகுறித்த பேச்சுவார்த்தை இப்போது நடைபெறவில்லை என்றும், விரைவில் அதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவோம் என்றார்.
இந்த சந்திப்பின் போது எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளர்கள் அமீர் ஹம்சா, ரத்தினம், மாநில பொருளாளர் முகைதீன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் அபுபக்கர் சித்திக் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
ஏற்கனவே திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளன. இந்நிலையில் மற்றொரு முஸ்லிம் கட்சியான எஸ்.டி.பி.ஐ.யும் திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. அத்துடன் தமீமுன் அன்சாரி தலைமையிலான மனிதநேய ஜனநாயகக் கட்சியும் திமுக கூட்டணியில் இணையக் கூடும் எனவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications