ஜம்மு காஷ்மீரில் பனிச்சரிவு: தமிழக வீரர் உட்பட 5 ராணுவ வீரர்கள் மாயம்- தேடும் பணி தீவிரம்!
ஜம்மு காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி தமிழக வீரர் மூர்த்தி உட்பட 5 ராணுவ வீரர்கள் மாயமாகினர்.
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி தமிழக வீரர் மூர்த்தி உட்பட 5 ராணுவ வீரர்கள் மாயமாகினர். அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வடக்கு காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டு அருகே முன்னரங்க நிலை ஒன்றில் மூன்று ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட திடீர் பனிச்சரிவில் 3 வீரர்களும் சிக்கினர்.

அதேபோல் குப்வாரா மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் இரண்டு வீரர்கள் சிக்கினர். இந்த 5 ராணுவ வீரர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பனிச்சரிவில் சிக்கிய ராணுவ வீரர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த என். மூர்த்தி என தெரியவந்துள்ளது. இவர் 36-வது ராஷ்டிரிய ரைபிள் படையணியைச் சேர்ந்தவர்.












Click it and Unblock the Notifications