மாயமான ஏஎன் 32 விமானம்.. 200 மைல் பரப்பளவில் கடலில் தேடுதல் பணி.. 4 விமானங்கள் தேடுகின்றன!
சென்னை: மாயமான இந்திய ராணுவத்தின் விமானத்தை தேடும் பணியில் விமானப்படையுடன், கடற்படையும் கை கோர்த்துள்ளது.
சென்னை தாம்பரம் விமானப் படை தளத்தில் இருந்து 29 பேருடன் அந்தமானின் போர்ட்பிளேருக்கு ஏ.என்.32 என்ற விமானம் இன்று காலை 8 மணிக்குப் புறப்பட்டுச் சென்றது.
நடுவானில் இந்த விமானம் பறந்து கொண்டிருந்தது. அப்போது காலை 8.30 மணியளவில் திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான விமானத்தின் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.
|
கடலில் விழ வாய்ப்பு
அந்த விமானத்தில் பயணித்த 29 பேரின் கதி என்ன என்று தெரியாததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. விமானம் வங்கக் கடலில் விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

4 விமானங்கள்
மாயமான விமானம் கடலில் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில், வீரர்களை உயிரோடு மீட்க முடியுமா என்ற முயற்சியில் கடற்படையின் 4 விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. விமானத்தை தேடும் பணியில் 2 டோர்னியர் விமானங்கள் உட்பட நான்கு விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

பறக்க முடியாது
ஏ.என்.32 வகை விமானங்கள் ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் அதிகபட்சமாக 4 மணி நேரம் மட்டுமே பறக்கும் திறன் கொண்டவை. எனவே, இதுவரை விமானத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை வைத்து பார்க்கும்போது அது நொறுங்கி விழுந்திருக்கவே வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் இத்துறை வல்லுநர்கள்.

200 கடல் மைல் தொலைவு
எனவே சென்னையில் இருந்து 200 கடல் மைல் தொலைவில் கடலுக்கு அடியில் தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பயணித்தவர்கள் யார்
இந்த விமானத்தில், கடற்படையை சேர்ந்த 11 வீரர்கள், விமானப்படையை சேர்ந்த 5 வீரர்கள், கடலோர பாதுகாப்பு படையை சேர்ந்த ஒருவர் உட்பட 29 பேர் பயணித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications