சென்னை மழை- வெள்ள கார்கள் விற்பனைக்கு: ஆடி, பிஎம்டபுள்யூ 16 லட்சம், ஐ20 வெறும் ரூ.3,000
சென்னை: சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான கார்கள் மிக குறைந்த விலையில் விற்பனைக்கு வந்துள்ளன.
கோபார்ட்.காம்(copart.com) என்ற இணையதளத்தில் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான கார்களை விற்பனை செய்வதற்காகவே தனிப்பக்கம் துவங்கப்பட்டுள்ளது.

அந்த பக்கத்தில் ஆடி, பிஎம்டபுள்யூ, ஹோண்டா, ஹுன்டாய், ஃபோக்ஸ்வேகன் உள்பட பல பிராண்ட் கார்கள் மிக குறைந்த விலையில் விற்பனைக்கு வந்துள்ளன. நிஸ்ஸான் சன்னி கார் ரூ. 3 ஆயிரம், ஹுன்டாய் ஐ20 ரூ.3 ஆயிரம், டொயோட்டா கொரோல்லா ரூ.3 ஆயிரம், நிஸ்ஸான் டெரானோ ரூ.6 ஆயிரம் என்று பல வகை கார்கள் நம்ப முடியாத அளவுக்கு குறைந்த விலையில் விற்பனைக்கு வந்துள்ளன. கார்களை வாங்க விருப்பம் உள்ளவர்கள் ஏலத்தில் கலந்து கொண்டு தங்களால் அளிக்க முடிந்த விலைக்கு கேட்கலாம்.
2014ம் ஆண்டு மாடல் பிஎம்டபுள்யூ கார் ரூ.13 லட்சத்திற்கு விற்பனைக்கு வந்துள்ளது.
சேலத்தைச் சேர்ந்த டெக்ஸ்டைல் ஷோரூம் டீலரான டி. மாதவராஜ் 2014ம் ஆண்டு மாடல் ஆடி ஏ6 காரை வெறும் ரூ.16 லட்சத்திற்கு வாங்கியுள்ளார்.
இது குறித்து கோபார்ட். காம் இணையதளத்தின் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் பிரிவு துணை தலைவர் கிறிஸ்டோபர் பின்சன் கூறுகையில்,
சென்னை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான கார்கள் விற்பனைக்கு வந்துள்ளன. அதை வாங்க இந்தியா முழுவதும் உள்ளவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். சில கார்கள் சேதம் அடைந்துள்ளன. சென்னை வெள்ளத்தால் சேதம் அடைந்த கார்களில் சுமார் 12 கார்களை இதுவரை விற்பனை செய்துள்ளோம் என்றார்.
விற்பனைக்கு வந்துள்ள கார்களில் பல சுமார் 1 வாரம் நீரில் மூழ்கிக் கிடந்தவை என்று கூறப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications