அம்மாடியோவ்... இது எந்த ஊரு ரெய்டு?.. குவியல் குவியல் நகைகள், கட்டுக் கட்டாக பணம்!
கட்டுக் கட்டாக பணம், பண்டல் பண்டலாக நகைகள், வளையல்கள், நெக்லஸ்கள், லாக்கர்களை அதிகாரிகள் பரிசோதிக்கும் வீடியோ வைராகியுள்ளது
Recommended Video

சென்னை: கட்டுக் கட்டாக பணம், தங்க குவியல்களை யாரோ அதிகாரிகள் சரி பார்க்கும் வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
சசிகலாவின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் வீடுகளில் கடந்த வாரம் வருமான வரித் துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். அப்போது ஏராளமான நகைகள், ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் ஜெயலலிதாவின் இல்லத்திலும் ஏதேனும் பதுக்கி வைத்திருக்கலாம் என்ற அடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது டெம்போ முழுவதும் ஏதோ சில ஆதாரங்களை அதிகாரிகள் அள்ளிச் சென்றதாக கூறப்படுகிறது. அது ஒரு புறம் இருக்கட்டும்.

பூமிக்குள் புதைப்பு
அளவுக்கு அதிகமாக சொத்து சேர்க்கும் பெரிய பணக்காரர்கள் கணக்கில் வராத பணம், நகைகளை பூமிக்கு அடியிலோ அல்லது பாதாள அறையிலோ புதைத்து வைப்பது வழக்கம். அது இருக்கும் இடம் அந்த குறிப்பிட்ட நபரை தவிர்த்து யாருக்கும் தெரியாது.

எங்கே எடுக்கப்பட்டது?
இந்த நிலையில் ஒரு வீடியோ, புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் ரகசிய அறையில் வங்கிகளில் இருப்பதை போன்று சிறிய சிறிய லாக்கர்கள் ஏராளமாக கிடக்கின்றன. இதுகுறித்து போட்டோ, வீடியோ வைரலாகியுள்ளது.

நகைக்கடையா
பெரும் பணக்காரர்களை போல் பெரிய நகைக்கடைக்காரர்களும் தங்களிடம் தேவைக்கு அதிகமாக கணக்கில் வராமல் உள்ள பணம், நகையை பூமிக்கடியிலோ அல்லது ரகசிய அறைகளிலோ புதைத்து வைப்பது வழக்கம். எனவே வீடியோவில் உள்ள இடம் வீடா அல்லது நகைக்கடையா என்பது தெரியவில்லை. போட்டோவில் இருப்பவர்கள் வருமான வரித் துறை அதிகாரிகளா என்றும் தெரியவில்லை.

எவ்ளோ நகை?
அந்த அறையிலிருந்து எடுக்கப்பட்ட நகைகளை குவியல் குவியலாக வைத்துள்ளது போன்ற வீடியோவும் வெளியாகியுள்ளது. அதில் ஒரு மூட்டையை பிரித்தால் அதில் ஏராளமான வளையல்களும், மறு மூட்டையை பிரித்தால் ஏராளமான நகைகளும், மற்றொரு மூட்டையில் இன்னும் ஏராளமான நகை என கூறு கட்டி வைக்கப்பட்டுள்ளது.

யாருடையது?
ஒரு சாக்கு பை முழுவதும் பணம் நிரம்பியுள்ளது போன்ற வீடியோவும் வெளியாகியுள்ளது. அதில் புதிதாக அச்சடிக்கப்பட்ட ரூ.2000 நோட்டுகளும், ரூ.500 நோட்டுகளும் பண்டல் பண்டலாக வைக்கப்பட்டுள்ளது. இது யாருடைய பணம், நகை என்பது போன்ற விவரங்களும் ஏதும் இல்லை. ஆனால் இந்த வீடியோக்களும், போட்டோக்களும் வைரலாகியுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications