ஓ.பன்னீர் செல்வத்தை மட்டும் தனியாக விட்டு விட்டு அத்தனை அமைச்சர்களும் பறந்து விட்டனர்!
சென்னை: ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலுக்காக அமைச்சர்கள் அனைவரும் தொகுதிக்குக் கிளம்பிப் போய் விட்டதால் தலைமைச் செயலகம் வெறிச்சோட ஆரம்பித்துள்ளது.
தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்காலத்தில் இடைத் தேர்தல் வந்தால் முதல்வரைத் தவிர அத்தனை அமைச்சர்களுக்கும் தேர்தல் பணியைக் கொடுத்து விடுவார்கள்.

வழக்கமாக ஓ.பன்னீர் செல்வம்தான் இந்த தேர்தல் பணிகளுக்குத் தலைமை தாங்கி குழுவை வழி நடத்துவார். ஆனால் இன்று அவரை விட்டு விட்டு மற்றவர்கள் தேர்தல் பணிகளைக் கவனிக்கக் கிளம்பியுள்ளனர்.
அமைச்சர்கள் அனைவரும் தற்போது ஸ்ரீரங்கம் தொகுதிப் பக்கம் காணப்படுகிறார்கள். இதனால் தலைமைச் செயலகம் பக்கம் அமைச்சர்கள் யாரையும் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தேர்தல் பணியில் 2 பேர் மட்டுமே இடம் பெறவில்லை. முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தூர் பாண்டியன் மட்டுமே தேர்தல் பணிகளுக்கு போகவில்லை. மற்ற 29 பேரையும் தேர்தல் பணிக்கு அனுப்பி வைத்துள்ளார் ஜெயலலிதா.
நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்வரை மட்டுமே பார்க்க முடிந்தது. வேறு அமைச்சர்கள் வரவில்லை. கட்சிக்காரர்கள் கூட வரவில்லை. அதிகாரிகளும், அரசு ஊழியர்களுமே பணியில் இருந்தனர்.
குடியரசு தினத்தன்று அமைச்சர்கள் மீண்டும் .சென்னை வருவார்கள் என்றும் அது முடிந்ததும் மீண்டும் ஸ்ரீரங்கம் பறந்து விடுவார்கள் என்றும் தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications