தருமபுரி இளவரசன் 2வது ஆண்டு நினைவு தினம்... 195 கிராமங்களில் 144 தடை உத்தரவு!
தருமபுரி: ஜாதியை மறுத்து காதல் திருமணம் செய்து கொண்ட விவகாரத்தில் இறந்த தருமபுரி இளவரசனின் 2வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அம்மாவட்டத்தின் 195 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தருமபுரியில் தலித் இளைஞரான இளவரசன், மற்றொரு ஜாதியைச் சேர்ந்த திவ்யாவை திருமணம் செய்து கொண்டார். இதற்கு திவ்யா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக தரும்புரி சுற்றுவட்டார கிராமங்களில் பெரும் வன்முறையே வெடித்தது.

மேலும் இந்த திருமணம் குறித்த வழக்கு நீதிமன்றத்துக்கும் போய் தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது. இந்த நிலையில் கடந்த 2013ஆம் ஆண்டு ஜூலை 4-ந் தேதி இளவரசன் மர்மமான முறையில் ரயில் தண்டவாளத்தில் சடலமாகக் கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஜூலை 4-ந் தேதி இளவரசனின் 2வது ஆண்டு நினைவு தினம் வருகிறது. இதனை அனுசரிக்க பல்வேறு அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.
இதையொட்டி வன்முறை சம்ப்வம் நிகழ்ந்த நத்தம் காலனி உள்ளிட்ட 195 கிராமங்களில் ஒரு வார காலத்திற்கு 144 தடை பிறப்பித்து அம்மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications