கண்ணீர் டூ உற்சாகம்.. காவேரி மருத்துவமனைக்கு வெளியே கலவையான உணர்வுகள்!
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்ட காவேரி மருத்துவமனைக்கு வெளியே சோகத்துடன் கூடிய திமுக தொண்டர்கள் தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலை மோசமானதைத் தொடர்ந்து நள்ளிரவுக்கு மேல் அவரை காவேரி மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். அங்கு வைத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் பரவியதும் திமுகவினர் பெரும் அதிர்ச்சியும், சோகமும் அடைந்தனர். தொண்டர்கள் மருத்துவமனைக்கு வெளியே குவிந்து விட்டனர். பலர் கதறி அழுதபடி காணப்பட்டனர். அனைவரின் முகத்திலும் சோகம் அப்பிக் கிடந்தது. கலைஞர் வாழ்க என்ற கோஷத்துடன் அவர்கள் காணப்பட்டனர்.
Tamil Nadu: DMK president M. Karunanidhi is being taken to Chennai's Kauvery Hospital. Visuals from outside his residence, where supporters have gathered in large numbers. pic.twitter.com/T0vgvGz4zR
— ANI (@ANI) July 27, 2018
ஆனால் கருணாநிதி அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் சீரடைந்து விட்டதாகவும், அச்சப்படத் தேவையில்லை என்றும் கூறிய செய்தியால் தொண்டர்கள் உற்சாகமடைந்தனர்.
#EarlierVisuals: MK Stalin, Kanimozhi, MK Alagiri, Dayanidhi Maran, TR Balu among those present at M Karunanidhi's residence. Karunanidhi has been admitted to Chennai's Kauvery Hospital. pic.twitter.com/W2HTPqmzev
— ANI (@ANI) July 27, 2018
கண்ணீ்ர் கதறல் போய் தொண்டர்களிடம் உற்சாகம் தொற்றிக் கொண்டது. டாக்டர் கலைஞர் வாழ்க என்ற கோஷத்துடன் அவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
#WATCH: DMK president M. Karunanidhi being taken to Chennai's Kauvery Hospital.#TamilNadu pic.twitter.com/uJ06YHOU5B
— ANI (@ANI) July 27, 2018
தொண்டர்கள் பெருமளவில் குவிந்ததைத் தொடர்ந்து காவேரி மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications