குஜராத்தில் தீவிரவாதிகள் ஊடுறுவல் எதிரொலி.. கூடங்குளத்தில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிப்பு
நெல்லை: குஜராத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக வெளியான தகவலைத் தொடர்ந்து கூடங்குளம் அணு உலைக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தான் தீவிரவாதிகள் திடீரென புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவ வீரர்கள் 6 பேர் உயிரிழந்தனர். இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில் 7 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் தற்போது குஜராத்துக்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் கடல் வழியாக ஊடுருவியுள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பும், ராவும் மத்திய உள்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருக்கும் தீவிரவாத அமைப்புகளுடன் சேர்ந்து ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும், நாடாளுமன்றத்தையும் தாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் ஓரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், பாதுகாப்பு தொடர்பான மையங்களில் கூடுதல் பாதுகாப்பு போடவும், கடலோர கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து நாடு முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலும், நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணு மின் நிலையம், பணகுடி அருகே மகேந்திரகிரி விண்வெளி ஆய்வு மையம், விஜயநாராயணம் கடறபடை ஆய்வு மையம் ஆகியவற்றில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இங்கு தலா 20 பேர் கொண்ட கமண்டோ படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு அதிநவீன தூப்பாக்கிகள், இரவு நேரத்தில் துல்லியாக பார்க்க கூடிய பைனாகுலர்கள் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல கல்பாக்கம் அணு மின் நிலையத்திற்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications