நாளை டிசம்பர் 6.. சென்னை ரயில் நிலையங்களில் உஷார்.. 5 அடுக்கு பாதுகாப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாபர் மசூதி இடிப்பு தினம் நாளைய தினம் அனுசரிக்கப்படுவதை யொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பாபர் மசூதி இடிப்பு தினம் டிசம்பர் 6ம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது. அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களில் காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். சென்னையில், எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் புதன்கிழமை முதல் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து நுழைவு வாயில்களிலும் உள்ள ‘மெட்டல் டிடக்டர்' கதவு வழியாகவே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். பயணிகள் உடைமைகளும் ‘ஸ்கேனர் கருவி மூலம் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. பிளாட்பாரங்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் அனைத்தும் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கி ஏந்திய கமாண்டோக்களும் ரயில் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பயணிகளோடு, பயணிகளாக மாறுவேடத்திலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ரயில்வே காவலர்கள் 250 பேரும், ரயில்வே பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் படையினர் உள்பட 350 பேர் 2 ஷிப்ட்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல், எழும்பூர் ரயில் நிலையமும் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 60 பாதுகாப்பு படை வீரர்கள், ரயில்வே காவலர்களுடன் இணைந்து பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோன்று தாம்பரம், மாம்பலம், பெரம்பூர், அரக்கோணம் உள்பட ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மதுரையில் ரயில் நிலையம் மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட முக்கிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ரயில்களில் பார்சல் அனுப்புவதற்கு தடை விதிக்கப்படவில்லை என்றாலும், பார்சல் பிரிவு, பார்சல் ஏற்றப்படும் ரயில் பெட்டிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பார்சல்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு பிறகே ரயில்களில் ஏற்றப்படுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+