பிரதமர் மோடி நாளை ராமேஸ்வரம் வருகை... அப்துல் கலாம் மணிமண்டபம் திறப்பு!
மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவு மணிமண்டபத்தைத் திறக்க பிரதமர் மோடி நாளை ராமேஸ்வரம் வரவுள்ளதால் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு மணிமண்டபத்தை திறந்து வைக்க நாளை பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருகை தருவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல்கலாம் ராமேஸ்வரம் பேய்க்கரும்பு என்னும் இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார். அங்கு மத்திய அரசு 15 கோடி ரூபாய் செலவில் நினைவு மணி மண்டபம் அமைத்துள்ளது.
Recommended Video

Abdul kalam Memorial opening by PM Modi on 27th July-Oneindia Tamil
அந்த மணிமண்டபத்தை அப்துல்கலாமின் இரண்டாம் நினைவுநாளான நாளை, பிரதமர் மோடி திறந்து வைக்க வருகை தருகிறார். அதையொட்டி, ராமேஸ்வரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இரண்டு வாரங்களுக்கு முன்பிருந்தே அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டும் திட்டமிட்டும் வந்தனர்.
மேலும், மதுரை விமான நிலையம் வரும் பிரதமர் மோடிக்கு அங்கு 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications