சுதந்திர தின கொண்டாட்டம்- நெல்லை, தூத்துக்குடியில் பாதுகாப்பு பணியில் 6 ஆயிரம் போலீசார்
நாடுமுழுவதும் நாளை சுதந்திர தினவிழா கொண்டாட்டம் நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈ
நெல்லை: சுதந்திர தினத்தை ஓட்டி நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நாடு முழுவதும் சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. சுதந்திர தின விழாவில் நக்சல்கள் மற்றும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என மத்திய புலனாய்வு துறை எச்சரிக்கை செய்துள்ளது.

இதையடுத்து நாடு முழுவதும் துணை ராணுவ படையினர் மற்றும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் பாளை வஉசி மைதானத்திலும், தூத்துக்குடி மாவட்டத்தில் தருவை மைதானத்திலும் சுதந்திர தின விழா நடக்கிறது.
அதில் கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். சுதந்திர தினத்தை ஓட்டி நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசார் ரோந்து பணி, வாகன சோதனை செய்ய வேண்டும் என நெல்லை டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் எஸ்பி அருண் சக்தி குமார் தலைமையில் 2 ஆயிரம் போலீசாரும், மாநகரில் போலீஸ் கமிஷனர் தலைமையில் 200 போலீசாரும், தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்பி மகேந்திரன் தலைமையில் 2 ஆயிரம் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாலியன் போலீசார் மற்றும் பட்டாலியன் போலீசார், ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வழிபாட்டு தலங்கள், ரயில் நிலையங்கள், பாலங்கள், பொது மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் கூடங்குளம் அணு மின் நிலையம், மகேந்திரகிரி இஸ்ரோ ஆய்வு மையம், தூத்துக்குடியில் உள்ள மத்திய அரசின் கனநீர் தொழிற்சாலைகள் உள்ள பகுதிகளில் கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்!












Click it and Unblock the Notifications