ஸ்கூல் பிள்ளைகளுக்கு க்விஸ் போட்டி நடத்தும் வேலையில் உட்கார வைக்கப்பட்ட சகாயம்!
சென்னை: ராஜ நாகத்தை சாரைப் பாம்பாக மாற்ற முடியுமா.. முடியாது இல்லையா.. ஆனால் அப்படி மாற்றிப் பார்த்திருக்கிறது தமிழக அரசு. வீரியம் கொண்ட ஐஏஎஸ் அதிகாரியாக வலம் வந்தவரைப் பிடித்து, சாதாரண வேலையில் உட்கார வைத்து ஏகத்துக்கு அவமானப்படுத்தியுள்ளது அரசு. ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த வேலையிலிருந்து தற்காலிகமாக தப்பியுள்ளார் சகாயம் - சென்னை உயர்நீதிமன்றத்தின் உதவியால்.
சகாயத்துக்குக் கொடுக்கப்பட்ட வேலை குறித்து தமிழகத்தில் 99 சதவீதம் பேருக்கு விவரம் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. காரணம், தமிழக அரசுத் துறைகளிலேயே கூட இந்த வேலை குறித்த ஞானம் பலருக்கும் இல்லை. அப்படி ஒரு படு சுமாரான வேலை இது.
அந்த வேலையின் பெயர் துணைத் தலைவர், அறிவியல் நகரம், சென்னை. இதன் அலுவலகம் கிண்டியில் உள்ளது. காலை முதல் மாலை வரை நன்றாக உட்கார்ந்து தூங்கி எழுந்து செல்லக் கூடிய தரம் கொண்டது இந்த வேலை. எந்த வேலையுமே செய்யாமல் சும்மா இருக்க விரும்புவோருக்காகவே உருவாக்கப்பட்டது போல இருக்கிறது இதன் வேலையைப் பார்த்தால்.

48 மணி நேரத்தில் 2 முறை இடமாற்றம்
கோ ஆப்டெக்ஸ் தலைவராக இருந்து வந்த சகாயத்தை, அமைச்சர் கோகுல இந்திராவுடன் மோதினார் என்ற ஒரே காரணத்திற்காக அதிரடியாக இந்திய மருந்து மற்றும் ஹோமியோபதி துறைக்கு மாற்றியது அரசு. ஆனால் அந்த மாற்றம் வந்த சூடு கூட குறையாத நிலையில் மீண்டும் டிரான்ஸ்பர் செய்யப்பட்டார் சகாயம். அதாவது 48 மணி நேரத்தில் அவரை தூக்கி விட்டனர்.

சயின்ஸ் சிட்டி
இப்போது அவர் மாற்றப்பட்ட பதவி சயின்ஸ் சிட்டி எனப்படும் அறிவியல் நகரத்தின் துணைத் தலைவர் பதவிக்கு. இந்த சயின்ஸ் சிட்டியின் தலைவராக இருப்பவர் தமிழக அரசின் மாநில உயர் கல்வித்துறை அமைச்சர். துணைத் தலைவர் பதவியில் சகாயத்தை உட்கார வைத்தனர்.

வெறும் 8 ஊழியர்கள்தான்
இந்த சயின்ஸ் சிட்டி அலுவலகத்தில் மொத்தமே 8 ஊழியர்கள்தான். இந்த பதவி குறைத்தும், இப்படி ஒரு வேலை இருக்கிறது என்பது குறித்தும் கூட யாருக்குமே தெரியாது.

1998 முதல் இருக்கிறது
ஆனால் 1998ம் ஆண்டு முதல் இந்த பதவி இருந்து வருகிறது, இந்த சயின்ஸ் சிட்டியும் இருந்து வருகிறது என்பதுதான் விசேஷமே.

வேலையைக் கேட்டா வெறுத்துப் போயிருவீங்க!
இந்த அறிவியல் நகரத்தின் வேலையைக் கேட்டால் வெறுத்துப் போயிருவீங்க. அப்படி ஒரு படு சாதாரணமான துறை இது.

குவிஸ் நடத்தி பரிசு கொடுக்கனும்
அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவது, பள்ளி மாணவ மாணவியருக்கு அறிவியல் புதிர் போட்டிகளை நடத்தி பரிசு கொடுத்து பாராட்டுவது, அறிவியல் நகர உறுப்பு நிறுவனங்களின் புள்ளிவிவரங்களை கம்ப்யூட்டரில் போட்டு இணையதளத்தில் போட்டு வைப்பது, அதைப் பார்த்து அனைவரும் பயன் பெற உதவுவது என்று போகிறது அவர்களின் ஆக்டிவிட்டி லிஸ்ட். இதில் தவறில்லை, குறையும் இல்லை. ஆனால் இதைச் செய்ய சகாயம் போன்றவர் அவசியமா என்பதுதான் கேள்வி.

இத்துப் போன வெப்சைட்
இந்த அறிவியல் நகரத்தின் இணையதளத்திற்குப் போனால் ஒட்டடை அடிக்காத பழைய வீட்டுக்குள் நுழைவது போன்ற பீலிங் வருகிறது. காரணம் அந்த அளவுக்கு அப்டேட்டே இல்லாமல் இருக்கிறது இந்த இணையதளம்.

2011க்குப் பிறகு ஒன்னுமே நடக்கலியா
புரோகிராம்ஸ் ஆர்கனைஸ்ட் என்ற பிரிவுக்குப் போனால், 2011 வரை மட்டுமே உள்ளது. அதுவும் கூட 2001 முதல் 2011 வரைதான் உள்ளது. அதற்கு முன்பு எதுவும் நடக்கவில்லையா என்று தெரியவில்லை. 2011க்குப் பிறகு எதுவுமே நடக்கவில்லையா என்றும் கேட்கத் தோன்றுகிறது. மேலும் வருடத்திற்கு நாலு என்று நடந்த நிகழ்ச்சிகளை போட்டு வைத்துள்ளனர். அதாவது கடனுக்குப் போட்டு வைத்திருப்பது போலவேத் தெரிகிறது.

குவிஸ் கூட மாத்தலையேப்பா...!
அதேபோல குவிஸ் என்று ஒரு பகுதி உள்ளது. அதைப் போய்ப் பார்த்தால் 2013ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு குவிஸ் போட்டுள்ளனர். அதற்குப் பிறகு அப்டேட் ஆகவில்லை. இன்னொரு பக்கத்தில் Dec 21, 2012 க்குப் பின் science quiz மாற்றவில்லை... ஒருவேளை "புத்தகத்தில்" இருந்த குவிஸ் கேள்விகளை எல்லாம் கேட்டு முடித்து விட்டார்களோ என்னவோ.. ஒரே புதிராக இருக்கிறது.!

"அஜீஸ்டென்ட்" கிடையாது!
துணைத் தலைவர் பதவிக்கு ஒரு உதவியாளர் உண்டு. ஆனால் அந்தப் பதவியை காலியாக வைத்துள்ளனர். அதாவது சகாயம் அவரது வேலைகளை அவரேதான் செய்ய வேண்டும். பெல் அடிக்கலாம்.. ஆனால் உதவியாளர் வர மாட்டார்.

பழைய ஓட்டை அம்பாசடர் கார்...!
துணைத் தலைவருக்கு கார் எல்லாம் பக்கவாக உண்டு. ஆனால் சவுண்டு ஜாஸ்தியாக வரும் ஸ்டார்ட் செய்து ஓட ஆரம்பித்தால். காரணம், அவ்வளவு பழைய காராம்.

ஒரு வேலையும் கிடையாது பாஸ்!
மொத்தமே எட்டே எட்டு பேர்தான் ஊழியர்கள் என்பதால் சகாயத்திற்கு எந்த வேலையும் கிடையாது. போஸ்டிங் போடுவது, டிரான்ஸ்பர் போடுவது என எதுவுமே கிடையாது. அவர் பாட்டுக்கு ஆபீஸுக்கு வந்து பொழுதைக் கழித்து விட்டுப் போகலாம். வெப்சைட் கூட அப்டேட் செய்யப்படாத காரணத்தால் அந்த வேலையைக் கண்காணிக்கும் வேலை கூட சகாயத்துக்கு இல்லை என்பதுதான் ரொம்ப சோகமான விஷயம்!

அறிவியலில் தவறில்லை.. ஆனால் நோக்கம் சரியா?
நிச்சயம் அறிவியல் நகரம் அமைத்ததிலும், அறிவியல் தொழில்நுட்பத்தை மேம்படுத்த அரசு முனைந்ததிலும் தவறே இல்லை. ஆனால் அந்த அறிவியல் நகரத்தை படு மோசமான நிலையில் வைத்திருப்பதுதான் தவறானது. அதை விட அதி தீவிரமான ஒரு அதிகாரியைக் கொண்டு வந்து இப்படி ஆபீஸ் சேரில் முடக்கிப் போட முனைந்தது அதை விட கொடுமையானது..

ஏழைகள் கண்ணீரைத் துடைக்க அனுப்பியிருக்கலாமே...
எத்தனையோ ஏழைகள், இல்லாதவர்கள், மாற்றுத் திறனாளிகள், சுய தொழில் புரிவோர் அரசின் தயவு வேண்டி தமிழகத்தின் அனைத்து மூலைகளிலும் பரிதவித்துக் கொண்டு உள்ளனர். அவர்களுக்கு உதவுவது போன்ற ஒரு வேலையில் சகாயத்தை உட்காரவைத்திருந்தால்.. நீங்க நல்லா இருக்கோணும்.. என்று மக்கள் உண்மையிலேயே வாயார வாழ்த்தியிருப்பார்கள்.!

இதுதாங்க சகாயம் வேலை பார்க்கிற ஆபீஸ்!
இதுதான் சகாயம் தற்போது மாற்றப்பட்டுள்ள ஆபீஸ்.. அதாவது கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ்நாடு பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் வளாகத்தில் இது உள்ளது. இந்த இணையதளத்தையும் போய்ப் பார்த்துட்டு வாங்க....!
-
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்?












Click it and Unblock the Notifications