இவ்வளவு எளிமையா.. பொன்.மாணிக்கவேல் மகள் திருமண பத்திரிகையை பார்த்தீர்களா?

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    எளிமையாக அச்சடிக்கப்பட்ட பொன்.மாணிக்கவேல் இல்ல திருமண அழைப்பிதழ்- வீடியோ

    சென்னை: அவ்வளவு பெரிய போலீஸ் ஐ.ஜி.யாக இருந்தபோதிலும், பொன்.மாணிக்கவேல் இல்ல திருமண விழா அழைப்பிதழ் எவ்வளவு சிம்பிளாக இருக்கிறது பாருங்களேன்.

    முன்பெல்லாம் திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது, இப்போது ரொக்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பது போன்ற பஞ்ச் டயலாக்குகள் கேட்டுக் கேட்டு புளித்துப் போயிருக்கும். அந்த அளவுக்கு திருமணங்கள் என்பவை இப்பொழுது தங்கள் குடும்ப கவுரவத்தை பறைசாற்றும் ஆடம்பர விழா போல் ஆகிவிட்டன.

    See the Pon Manickavel daughter wedding invitation

    ஒரு திருமணத்திற்கு எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அந்தக் குடும்பத்தின் கவுரவம் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த ஆடம்பரம் என்பது மணப்பெண் மற்றும் மணமகன் அணியும் விலை உயர்ந்த ஆடைகள், அணிகலன்கள், பந்தியில் பரிமாறப்படும் பலவகை உணவு பதார்த்தங்கள் மட்டும் கிடையாது.. இந்த ஆடம்பரம் என்பது, திருமண பத்திரிக்கையிலேயே, தொடங்கி விடுகிறது.

    விதவிதமான திருமண பத்திரிக்கை இப்போது டிரெண்ட் ஆகி உள்ளன. திருமண பத்திரிக்கைகளில் கூட உயர்தர வகுப்பினருக்கு ஒரு மாதிரியும், நடுத்தர வகுப்பினருக்கு வேறு மாதிரியும், அடித்தட்டு மக்களுக்கு அளிக்கப்படும் பத்திரிகைகள் சாதாரணமாகவும் அச்சிடப்படும் வழக்கம் மேல்தட்டு மக்களிடம் வந்துவிட்டது.

    See the Pon Manickavel daughter wedding invitation

    இப்படி எல்லாம் திருமணம் என்பது ஆடம்பர வைபோகம் என்று ஆகிவிட்ட நிலையிலும் கூட, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக உள்ள பொன்.மாணிக்கவேல் வீட்டு திருமணம் மிக எளிமையாக இன்று நடைபெற்றது.

    Pon Manickavel daughter wedding

    பொன் மாணிக்கவேல் மகள் டாக்டர் பாக்கியலட்சுமி மற்றும் தேனமுதன் ஆகியோருக்கு, இன்று காலை சென்னையில் திருமணம் நடைபெற்றது. இதற்காக இரு வீட்டார் தரப்பில் அச்சடிக்கப்பட்டுள்ள திருமண பத்திரிக்கையை நீங்கள் படத்தில் பார்க்கலாம்.

    1980, 90களில் புழக்கத்தில் இருந்த பாணியில் மிகவும் சிம்பிளாக இந்த பத்திரிகை அச்சடிக்கப்பட்டுள்ளது. மங்களகரம் என்று மதிக்கப்படும், மஞ்சள் வண்ணத்தில் அடிக்கப்பட்டுள்ள பத்திரிகையில், முகப்பு பக்கம் இளஞ்சிவப்பு வண்ணத்தில் உள்ளது. அக்காலகட்டங்களில் வெளியான திருமண பத்திரிக்கையை போன்றே இதிலும் முருகனின் திருமண வைபோகம் படம் இடம் பெற்றுள்ளது. அதற்கு கீழே பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் படம் இடம்பெற்றுள்ளது. இந்த காலத்திலும் இவ்வளவு சிம்பிளாக ஒரு போலீஸ் அதிகாரி இருக்க முடியுமா என்பதற்கு பொன்.மாணிக்கவேல் வீட்டு திருமணம் ஒரு சிறந்த உதாரணம்.

    Pon Manickavel daughter wedding
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+