கொம்பனில் சாதிய சீண்டல் இல்லை- 'அண்ணன்' கிருஷ்ணசாமி எதிர்க்காதீங்க.. சீமான் வேண்டுகோள்!!
சென்னை: கொம்பனில் சாதிய சீண்டல்கள் எதுவும் இல்லை என்று படம் பார்த்த நடுநிலையாளர்கள் தெரிவித்துள்ள நிலையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் மருத்துவர் அண்ணன் கிருஷ்ணசாமி இனியும் அப்படத்தை எதிர்த்து கொடிபிடிக்க வேண்டாம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான இயக்குநர் சீமான் அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:
கொம்பன் படத்தில் சாதிய சீண்டல்கள் இருப்பதாக மருத்துவர் கிருஷ்ணசாமி கிளப்பிய புகாருக்குப் படம் பார்த்த நடுநிலையாளர்கள் உரிய நம்பிக்கையைப் பதிலாகச் சொல்லி இருக்கிறார்கள். நடிகர் சங்கத்தின் தலைவர் சரத்குமார், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் அண்ணன் கலைப்புலி தாணு, இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்கிரமன் உள்ளிட்டோர் நேற்று கொம்பன் படத்தை முழுதாகப் பார்த்து, படத்தில் சாதிய மோதலுக்கான எந்த அறிகுறியும் இல்லை எனச் சொல்லியிருக்கிறார்கள்.

நிறைய படங்களை இயக்கியவரும் சமூக அக்கறை கொண்டவருமான இயக்குநர் விக்கிரமன், ''கொம்பன் படத்தில் சாதி மற்றும் ஆட்சேபனைக்குரிய காட்சிகள் இருப்பதாக யாராவது நிரூபித்தால், நான் இனிமேல் படம் எடுப்பதையே நிறுத்தி விடுகிறேன்" எனச் சொல்லியிருக்கிறார்.
இத்தகைய நம்பகமான கருத்துகளுக்குப் பிறகாவது அண்ணன் கிருஷ்ணசாமி கொம்பன் படத்துக்கான எதிர்ப்பைக் கைவிட வேண்டும். ஆனால், இப்போதும் 'கொம்பன் படம் வெளியானால் சாதிய மோதல்கள் உருவாகும்' என அண்ணன் கிருஷ்ணசாமி திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பது, தேவையற்ற பதற்றத்தை உருவாக்கிவிட வாய்ப்பிருக்கிறது.
'கொம்பன் படத்தில் சாதிய பிரச்னை' எனப் பேசிக்கொண்டே இருந்தால், அது உண்மையான சாதியப் பிரச்னையாகவே மாறிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் மரியாதைக்குரிய தலைவராக இருக்கும் அண்ணன் கிருஷ்ணசாமி, இத்தகைய அபாயத்தை உணராமல் ஒரு திரைப்படத்துக்கு எதிராகக் கொடிபிடித்துக் கொண்டு இருக்கக்கூடாது.
திரைத்துறைக்கு அடுத்தடுத்து நிலவும் இத்தகைய ஆபத்துகளைச் சகித்துக் கொண்டு இருக்க முடியாது. படத்தில் இடம் பெற்றிருந்த சர்ச்சைக்குரிய அத்தனை காட்சிகளையும் வசனங்களையும் தணிக்கைத்துறை நீக்கி இருக்கிறது.
அண்ணன் கிருஷ்ணசாமியின் மன உணர்வுக்கு மதிப்பளித்து தணிக்கைத்துறையும் சம்பந்தப்பட்ட படத்தின் தயாரிப்பு தரப்பும் மிகுந்த கவனத்தோடு படத்தை சரி செய்திருக்கிறார்கள். இன்று படம் வெளியாக இருக்கும் நிலையில், அண்ணன் கிருஷ்ணசாமி அவர்களே படத்தை நேரடியாகப் பார்த்து அதன் உண்மைத்தன்மையை அறிய வாய்ப்பிருக்கிறது.
இதற்கிடையில் கொம்பன் வெளியீட்டுக்கும் 'நண்பேண்டா' வெளியீட்டுக்கும் இடையே எந்த பிரச்னையும் இல்லை என நண்பேண்டா படக்குழுவினரே என்னைத் தொடர்புகொண்டு பேசினார்கள். திரைத்துறை எத்தகைய மோதலோடும் இல்லாமல் கலைப்பணி ஆற்றும் களமாக இருக்க வேண்டும் என்பதையே நாம் தமிழர் கட்சி விரும்புகிறது.
எனவே பெருமதிப்புமிக்க மருத்துவர் கிருஷ்ணசாமி அவர்கள் கொம்பன் பிரச்சனையை மேற்கொண்டும் பெரிதாக்காமல், அமைதிகாக்க வேண்டும். திரைத்துறையில் பணியாற்றும் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் அண்ணன் கிருஷ்ணசாமி நினைத்துப் பார்க்க வேண்டும். மிகுந்த பொருளாதார பிரச்னைகளுக்கு மத்தியில் உருவாகும் திரைப்படங்கள் இத்தகைய நெருக்கடிகளுக்கு ஆளாகும் போது அது திரைத்துறையையே நலிந்து போக வைத்துவிடும்.
தமிழ்த்திரைத்துறையைக் காக்க வேண்டிய கடமை ஒரு தமிழராக அண்ணன் கிருஷ்ணசாமிக்கும் இருக்கிறது என்பதை மிகுந்த அன்போடு நாம் தமிழர் கட்சி சொல்லிக்கொள்கிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications