ஆசிரியை சபரிமாலா தன்மானம் மிகுந்தவர் - சீமான் பாராட்டு: வீடியோ
அரசு ஆசிரியை வேலையை ரஜினாமா செய்த சபரிமாலாவை பாராட்டுகிறேன் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
வேலூர்: நீட் தேர்வுக்கு எதிராக அரசு ஆசிரியர் வேலையை ராஜினாமா செய்த சபரிமாலாவின் தன்மானத்தை பாராட்டுவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
வேலூரில் சீமான் செய்தியாளர்களிடம் பேசும்போது, நீட் தேர்வுக்கு எதிராக வேலையை ராஜினாமா செய்த ஆசிரியை சபரிமாலாவின் தன்மானத்தைப் பாராட்டுவதாகக் கூறினார்.

மேலும், மாநில அரசு நீட் தேர்வுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களையும் அனிதாவின் மரணத்தையும் கண்டும் காணாமல் இருந்து வருகிறது. ஆனால், பல லட்சங்கள் செலவழித்து எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடி வருகிறது. அரசுக்கு மக்களின் துன்பங்கள் ஒரு பொருட்டே இல்லை என்று சாடினார்.
அதுமட்டுமில்லாமல் பிரதமர் மோடியே தமிழகத்தில் முதல்வர் வேட்பாளராக நின்றாலும் ஜெயிக்க முடியாது என்றும் சீமான் கூறினார்.












Click it and Unblock the Notifications