பெற்றோர் பணத்தில் படம் பார்க்கலாம் அரசியலுக்கு வரக்கூடாதா... ரஜினிக்கு சீமான் சுளீர் கேள்வி!
பெற்றோரின் பணத்தில் சினிமா பார்ப்பதை ஏற்கும் ரஜினி, மாணவர்கள் அரசியலுக்கு வருவதை ஏன் ஏற்கவில்லை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video

தஞ்சாவூர் : பெற்றோர் கஷ்டப்பட்டு பணம் கொடுத்து படிக்க வைக்கிறார்கள் படிக்கிற வயதில் மாணவர்கள் அரசியலுக்கு வரவேண்டாம் என்று ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சீமான் மாணவர்கள் என்னுடைய படத்தை பார்க்க வரவேண்டாம் என்று ரஜினி சொல்வாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.
தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் கூறியதாவது : ரஜினி சொல்வது போல அரசியலில் வெற்றிடம் என்றெல்லாம் ஒன்றும் இல்லை. அவர் நினைக்கிறார் ஜெயலலிதா உயிருடன் இல்லை, கருணாநிதியால் அரசியலில் செயல்பட முடியவில்லை அதனால் அந்த இடத்திற்கு வரலாம் என ரஜினி நினைப்பதே ஒரு சந்தர்ப்பவாதம்.
அந்த அணுகுமுறையை எப்படி பார்க்க முடியும். ரஜினியின் பேச்சை கேட்கும் போது ஒரு பழமொழி தான் நினைவுக்கு வருகிறது, அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும்னு காத்திருந்தது போல இருக்கிறது.

ஏன் வரக்கூடாது?
மாணவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்றால் வேறு யார் வந்து அரசியல் செய்வது. அரசியல் என்பது தனியாக ஒன்றே கிடையாது. அரசியல் என்பது ஒரு வாத்தியம்.

தனது படம் பார்க்க வேண்டாம் என சொல்வாரா?
பெற்றோர் கஷ்டப்பட்டு பணத்தை கொடுத்து படிக்க அனுப்புகிறார்கள், படிக்கிற காலத்தில் அரசியலுக்கு வரவேண்டாம் என்று சொல்கிறார் ரஜினி. படிக்கத் தானே காசு கொடுத்து அனுப்புகிறார்கள் பெற்றார் அந்த பணத்தில் என் படத்தை பார்க்க வேண்டாம் என்று ரஜினி சொல்ல வேண்டியது தானே.

அரசியலுக்காக
காவிரி மேலாண்மை வாரியத்தை பாஜக அமைக்காது கர்நாடக அரசு அமைக்க விடாது. காவிரி என்பது தமிழர்களுக்கு உயிர் பிரச்னை. கர்நாடக மாநிலத்திற்கு அது அரசியல் தேர்தல் வெற்றி பிரச்னை.

திராவிட கட்சிகளை துடைத்தெறிய வேண்டும்
காவிரி நீரை பெற்று தராத தேசிய கட்சிகள் இங்கு வந்து வெல்லவே முடியாது என்பதை தமிழகர்கள் நிரூபிக்க வேண்டும். அதே போன்று காவிரி நீரை பெற்றுத் தராத இரண்டு திராவிட கட்சிகளையும் துடைத்தெறிய வேண்டும் என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications