ரஜினி அரசியலுக்கு வருவது ஜனநாயகமா.. இந்த மாதிரி கேள்வி கேட்காதீங்க- செய்தியாளர்களிடம் பாய்ந்த சீமான்
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது ஜனநாயகமா? ஜனநாயகம் ஜனநாயகம் என்று யாரோ தமிழ்நாட்டை ஆள வேண்டுமா? இதுபோன்ற கேள்விகளை என்னிடம் கேட்காதீர்கள் என்ற சீமான் பத்திரிகையாளர்களிடம் பாய்ந்தார்.
சென்னை; கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்துக் கொண்டதே அரசியல் பரபரப்பாகிவிட்டது.
தமிழகம் முழுவதும் உள்ள 15 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை சந்தித்த அவரது, கடைசி நாள் உரை அரசியல் தலைவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஸ்டாலின், திருமாவளவன், அன்புமணி, சீமான் போன்றவர்கள் அரசியலில் இருந்தாலும் சிஸ்டம் சரியில்லை என்று ரஜினிகாந்த் பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியது. இதற்கு பல அரசியல் கட்சித் தலைவர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை கடுமையாக சீமான் எதிர்த்து வருகிறார்.

அரசியலுக்கு வேண்டாம்
திருச்சியை தொடர்ந்து சென்னை எழும்பூரிலும் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ரஜினி அரசியலுக்கு வர வேண்டாம் என்று திட்டவட்டமாக கூறினார். மேலும், தமிழ் நாட்டில் நாங்கள் ஆட்சி செய்து கொள்கிறோம் என்று தெரிவித்தார்.

முப்பாட்டன் செய்த தவறு
தமிழ்நாட்டை நீண்ட நாட்கள் வாழ்ந்தால் யாரும் தமிழராக மாற முடியாது. என் தகப்பன், முப்பாட்டான் செய்த தவற்றை நாங்கள் செய்ய மாட்டோம். 44 ஆண்டுகள் தமிழகத்தில் வாழ்ந்த ரஜினி பச்சைத் தமிழனாக ஆக முடியாது.

ரஜினி புதுசா சொல்லல
நாட்டின் முதல் குடிமகனை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்க முடியாது. ஜனாதிபதி தேர்தலை 21 வயதில் ஒருவர் நடத்திவிட முடியும். ஆனால் தேர்தலில் போட்டியிட முடியாது. தேர்தலில் போட்டியிட 25 வயது வரை காத்திருக்க வேண்டும். இந்த அமைப்பே தப்பு என்கிறேன். இதைத்தான் சிஸ்டம் சரியில்லை என்று ரஜினி சொல்லிகிட்டு இருக்கிறார். இதை நாங்கள் ரொம்ப நாளாக சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

சினிமாவோடு நிறுத்துங்க..
திரைத்துறை, கலைத் துறை என எதற்கு வேண்டுமானாலும் யாரும் வரலாம். ஆனால் அரசியலுக்கு வரக் கூடாது. அதனை மக்கள் ஏற்க மாட்டார்கள். நாங்களும் ஏற்க மாட்டோம் என்று சீமான் கூறினார்.

கேள்வி கேட்காதீங்க
இதற்கு ஜனநாயக நாட்டில் அனைவரும் அரசியலுக்கும் வரலாம் தானே என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு வெகுண்டெடுழுந்த சீமான், ஜனநாயகம்,. ஜனநாயக நாடு என்றெல்லாம் என்கிட்ட கேள்வி கேட்காதீர்கள். யாருகிட்ட என்ன கேள்வி கேட்கின்றீர்கள் என்று சீறிப் பாய்ந்தார் சீமான்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications