தலைசிறந்த இந்துத்துவாவாதியாக வளர்ந்து வருகிறார் சீமான்: அர்ஜூன் சம்பத் புகழாரம்!
தமிழகத்தில் தலை சிறந்த இந்துத்துவாவாதியாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வளர்ந்து வருகிறார் என இந்து மக்கள் கட்சியின் அர்ஜூன் சம்பத் பாராட்டியுள்ளார்.
சென்னை: தலைசிறந்த இந்துத்துவாவாதியாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வளர்ந்து வருகிறார் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் புகழாரம் சூட்டியுள்ளார்.
நியூஸ் 7 டிவி சேனலின் வியூகம் நிகழ்ச்சியில் சீமான் குறித்து அர்ஜூன் சம்பத் கூறியதாவது:

இந்து தேசியமும் ஒன்று
தமிழ்த் தேசியம் வேறு... இந்து தேசியம் வேறு அல்ல.. இரண்டுமே ஒன்றுதான். நாங்களும் நாம் தமிழர் கட்சியும் எந்த புள்ளியிலும் வேறுபடவில்லை.

பெரியாரை படித்ததால் விளைவு
ஒருகாலத்தில் நாத்திகர்... அன்பு சகோதரர் சீமான் ஒரு காலத்தில் மேடைகளிலே இந்து சமயம் மற்றும் கடவுள்கள் குறித்து பேசியிருக்கிறார். பெரியார் புத்தகங்களை படித்ததால் ஏற்பட்ட விளைவு அது.

சீமான் தலைசிறந்த இந்துத்துவாவாதி
இப்போது சீமானே பெரியாரை தமிழராக ஒத்துக் கொள்வதில்லை. அண்ணாவையும் அவர் தமிழராக ஒத்துக் கொள்வதில்லை. ஒரு அரசியல் பரிணாம வளர்ச்சியாக இப்போது சீமான் ஒரு தலைசிறந்த இந்துத்துவாவாதியாக, தமிழ்த் தேசியவாதியாக வந்து கொண்டிருக்கிறார்.

இணைந்து செயல்படுவோம்
இந்த முன்னேற்றத்தை நாங்கள் வரவேற்கிறோம். இலங்கைத் தமிழர், தமிழீழ விடுதலை, தமிழக உரிமை, தமிழர் பண்பாடு, கலாசாரம் இதுபோன்ற விஷயங்களில் நாம் தமிழர் கட்சியும் இந்து மக்கள் கட்சியும் ஒருங்கிணைந்து செயல்படக் கூடிய வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. ஏற்கனவே ஒரு சில மேடைகளை நான் சீமானோடு பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
இவ்வாறு அர்ஜூன் சம்பத் கூறினார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications