கடலூரில் சீமானுக்கு பெரும் பின்னடைவு - நியூஸ் 7 கருத்துக்கணிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூர் தொகுதியில் பெரும் பின்னடைவை சந்திக்க வாய்ப்புள்ளதாக நியூஸ் 7- தினமலர் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.

இந்திய தேர்தல் வரலாற்றில் ஒரே மேடையில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தது நாம் தமிழர் கட்சிதான். அதேசமயம் வரும் சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறார். அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூர் தொகுதியில் வேட்பாளராக களத்தில் உள்ளார்.

seeman lossing cuddalore, says survey

இந்நிலையில் நியூஸ் 7 - தினமலர் நடத்திய கருத்துக் கணிப்பில் கடலூர் தொகுதியில் திமுகவுக்கு ஆதரவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு திமுகவுக்கு 35 சதவீத ஆதரவு காணப்படுவதாக கருத்துக் கணிப்பு கூறுகிறது. அதிமுகவுக்கு 34.4 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. தேமுதிக - ம.ந.கூட்டணிக்கு 10.1 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. அதேசமயம் பாமக 7.9 சதவீத ஆதரவுடன் நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

அதேசமயம் சீமானுக்கு எத்தனை சதவீத வாக்குகள் கிடைக்கும் என்பது கருத்துக்கணிப்பில் குறிப்பிடப்படவில்லை. அங்கு திமுக, அதிமுக அடுத்தடுத்த இடத்தை பிடித்திருப்பதை வைத்து பார்க்கும்போது சீமான் பெரும் பின்னடைவை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+