கமல்ஹாசனுடன் சீமான் திடீர் சந்திப்பு!
நடிகர் கமல்ஹாசன் நாளை அரசியல் பயணத்தை தொடங்கவுள்ள நிலையில் அவரை சீமான் திடீரென சந்தித்துள்ளார்.
Recommended Video

சென்னை: நடிகர் கமல்ஹாசன் நாளை அரசியல் பயணத்தை தொடங்கவுள்ள நிலையில் அவரை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் ராமேஸ்வரத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளார். இதனை முன்னிட்டு பல்வேறு மூத்த தலைவர்களையும் கமல்ஹாசன் சந்தித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கமலை நேரில் சந்தித்து சீமான் வாழ்த்து தெரிவித்ததாக கூறப்படுகிறது..

ரசிகனாக இருந்தவன்
இதைத்தொடர்ந்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சீமான், படிக்கும் காலத்தில் இருந்து கமலின் ரசிகனாக இருந்தவன் நான் என தெரிவித்தார்.

நானே அவரை பார்க்கவந்தேன்
அரசியலில் மாற்றத்தை கொண்டு வர விரும்புகிறார் கமல் என்று கூறிய சீமான், அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வந்ததாக கூறினார். மாபெரும் கலைஞனான கமல்ஹாசன் தன்னை வந்து பார்ப்பதை விட நானே அவரை பார்க்க வந்தேன் என்றும் சீமான் கூறினார்.

வெற்றி பெற வாழ்த்து
கமலின் அரசியல் பயணம் புரட்சிகரமாகவும் வெற்றிகரமாகவும் இருக்க வாழ்த்துவதாகவும் சீமான் கூறினார். தானும் கமலும் ஒரே மண்ணைச் சேர்ந்தவர்கள் என்றும் சீமான் கூறினார்.

காலம்தான் முடிவு செய்யும்
கமலுடன் இணைந்து செயல்படுவது குறித்து காலம்தான் முடிவு செய்யும் என்றும் சீமான் தெரிவித்தார். நீங்கள் விரும்பினால் இணைந்து செயலாற்றுவோம் என்றும் சீமான் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications