கமல் சினிமா புகழை வைத்து அரசியலுக்கு வரலாம்... அதுக்கப்புறம்?.. சீமான் கேள்வி!
நடிகர் கமல்ஹாசன் தனக்கு இருக்கும் சினிமா புகழை வைத்து அரசியலுக்கு வரலாம் அதன் பிறகு என்ன செய்வார் என்பதே கேள்வி என்று சீமான் கேட்டுள்ளார்.
சென்னை : நடிகர் கமல்ஹாசன் தனக்கு இருக்கும் சினிமாப் புகழை வைத்து அரசியலுக்கு வரலாம் ஆனால் அதற்குப் பிறகு எப்படி செயல்படுவார் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
ரோஹிங்கியா முஸ்லிம்களைக் கொன்று குவிக்கும் மியான்மர் அரசைக் கண்டித்தும் ரோஹிங்கியா அகதிகளுக்கு அடைக்கலம் தரமறுத்து வெளியேற்ற துடிக்கும் மத்திய அரசைக் கண்டித்தும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. மறுமலர்ச்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் சென்னை, அரும்பாக்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று கண்டனவுரையாற்றினார்.
அதன் பின்னர் சீமான் செய்தியாளர்களிடம் பேசியதாவது: மியான்மரில் ரோகிங்கியா முஸ்லிம்கள் படுகொலை செய்யும் அரசைக் கண்டித்தும், பிழைத்தால் போதும் என்று அகதிகளாகவரும் மக்களை ஏற்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்தும் தான் இன்றைய பொதுக்கூட்டம் நடைபெற்றது. அரசு இதை கவனத்தில் எடுக்காததால் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என்று தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறோம்.

பரோல் கிடைத்ததை வரவேற்போம்
சசிகலாவிற்கு 15 நாட்கள் பரோல் கொடுத்திருக்கலாம், சட்டத்தை தாண்டி மனிதநேய அடிப்படையில் உடல்நிலை சரியில்லாமல் கணவர் இருப்பதால் அவர் பரோல் கேட்டிருந்தார். 15 நாட்கள் கேட்ட நிலையில் 5 நாட்கள் பரோல் கொடுத்திருப்பதை வரவேற்போம். நடராஜனுக்கு உறுப்பு மாற்று சிகிச்சை செய்ததில் சர்ச்சை இருந்தால் விசாரணை நடத்த வேண்டும்.

தாஜ்மஹால் சிதிலமடையும்
தாஜ்மஹால் திட்டமிட்டே சுற்றுலாப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய மன்னர் கட்டினார் என்பதற்காகவே மதச்சாயம் பூசி இந்த நடவடிக்கை எடுக்கக் கூடாது. சுற்றுலாப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதால் பராமரிப்பு, பாதுகாப்பு இல்லாமல் சிதிலமடைந்து போகும்.

பாஜக அரசின் சூழ்ச்சி
தாஜ்மஹாலை சிதிலமடையச் செய்யலாமே தவிர பாபர் மசூதி போல இடிக்க முடியாது, அது சர்வதேச அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே மதவாதத்தை புகுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எப்படி கொண்டு செல்வார்?
கமல்ஹாசன் தனக்கு இருக்கும் சினிமா வெளிச்சத்தை பயன்படுத்தி அரசியல் கட்சி தொடங்கலாம். ஆனால் அதன் பின்னர் அதனை எப்படி கொண்டு செல்லப் போகிறார் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications