தமிழக மீனவர் கொலை.. இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட்ட சீமான் கைது
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரின் அட்டூழியக் கொலைகளைக் கண்டித்து இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட்ட சீமான் கைது செய்யப்பட்டார்.
சென்னை: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டை கண்டித்து இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட்ட சீமான் கைது செய்யப்பட்டார்.
தனுஷ்கோடிக்கும், கச்சதீவுக்கும் இடையே உள்ள கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பிரிட்ஜோ என்ற மீனவர் கழுத்தில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். மேலும் சரோன் என்ற மீனவர் காயம் அடைந்தார்.

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என்றும், இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் பிரிட்ஜோவை சுட்ட இலங்கை கடற்படை வீரரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி மீனவர்கள் கடந்த 7 நாள்களாக தங்கச்சிமடத்தில் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கையின் அட்டூழியத்தைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகினறனர்.
இந்நிலையில் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை நாம் தமிழர் கட்சியினர் அதன் தலைவர் சீமான் தலைமையில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அப்போது மீனவர்கள் கொலைக்கு கண்டனம் தெரிவித்தும், மீனவர்களை பாதுகாக்கக் கோரியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் எல்லை தாண்டும் மீனவர்களை பாகிஸ்தான் கடற்படையினர் கூட கொலை செய்யாமல் கைது செய்யும் நிலையில் இலங்கையின் அட்டூழியம் கண்டிக்கத்தக்கது என்றும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.
இதைத் தொடர்நது சீமான் உள்ளிட்ட கட்சியினரை போலீஸார் கைது செய்தனர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications