இலுமினாட்டி சின்னம்: ஓபாமா... ஜார்ஜ் புஷ்... ரஜினி... ஒப்பிட்ட சீமான்
அமெரிக்க முன்னாள் அதிபர்கள் ஓபாமா ஜார்ஜ் புஷ் ஆகியோருடன் ரஜினியை ஒப்பிட்டுள்ளார் நாம் தமிழர் இயக்குநர் சீமான்.
Recommended Video

சென்னை: இலுமினாட்டி என்று கமல்ஹாசனை பலரும் கூறி வந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தை இலுமினாட்டியின் குறியீடாக சித்தரித்துள்ளார் சீமான். ரஜினியை ரசிகர்கள் கடவுளாக சித்தரிக்க... சீமானோ தீய சக்தி என்று கூறி விட்டார்.
பாபா படத்தில் ஒரு முத்திரையை முதன் முதலாக அறிமுகம் செய்தார் ரஜினி. அவரது ரசிகர்கள் தங்களின் கைகளில் அடையாளமாக வைத்து கொண்டாடினர்.
அரசியலுக்கு வரப்போவதாக கூறிய ரஜினி, அந்த அடையாள முத்திரையை மீண்டும் காட்டினார். ஆன்மீக அரசியல் என்று கூறும் ரஜினியின் கை சின்னம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சின்னங்கள் குறியீடுகள்
வின்சென்ட் சர்ச்சில் முதல் எம்ஜிஆர், ஜெயலலிதா என இரட்டை விரலை வெற்றியின் குறியீடாக காட்டி ஜெயித்து வந்தவர்கள்தான். அது வெற்றியின் சின்னம் சுண்டு விரல், மோதிர விரலை மடக்கி, கட்டை விரலோடு சேர்த்து மோதிர விரல், ஆட்காட்டி விரலை உயர்த்தியிருப்பார்கள்.

ஒபாமா சின்னங்கள்
அமெரிக்காவின் முன்னாள் அதிபர்கள் ஜார்ஜ் புஷ், ஓபாமா ஆகியோர் நடுவிரல், மோதிர விரலை மடக்கி கட்டை விரலோடு சேர்த்து புதுவிட சின்னத்தை பரப்பினர். அது இலுமினாட்டிகளின் சின்னம் என்று கூறினர். யார் இந்த இலுமினாட்டிகள் அவர்களின் வேலைதான் என்ன என்று பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இலுமினாட்டி சின்னம்
இலுமினாட்டிகள் யாரும் தன்னை இலுமினாட்டி என்று அறிவித்துக் கொள்ளமாட்டார்கள். இலுமினாட்டிகள் சின்னம் ஒற்றைக்கண் முக்கோணத்தில் இருப்பதால். கமல்ஹாசன் பிக் பாஸ் சின்னம் அந்த கண். அவர் இலுமினாட்டி ரகசிய அமைப்பில் உள்ளார் என்பதற்கு இதுவே ஆதாரம் என்று கூறி பரப்பினர்.

கைகளில் சின்னம்
இன்று தொலைக்காட்சி சேனலில் பேசிய சீமான் தனது கைகளில் சிலரது படங்களை வைத்திருந்தார். ஜார்ஜ் புஷ், ஓபாமா ஆகியோரின் படங்களை வைத்து ரஜினியோடு ஒப்பிட்டு பேசினார். இறுதியில் தீய சக்தியின் சின்னம் என்றும் கூறினார்.

முத்திரைக்கு பெயர்
ரஜினியின் முத்திரையை தீய சக்தியோடு ஒப்பிட்டுள்ளார் சீமான். தமிழினத்தை அழித்த ராஜபக்சேவின் மகன் ரஜினியை பாராட்டுவதா என்றும் கேட்டுள்ளார் சீமான். எது எப்படியோ இத்தனை ஆண்டு காலமாக அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருந்த ரஜினி இப்போதுதான் காலை நனைக்கவே ஆரம்பித்திருக்கிறார் அதற்குள் அவரது முத்திரையை வைத்து தீய சக்தியாக முத்திரை குத்தி விட்டார் சீமான்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications