"இந்தியா" வெள்ளையனுக்கு பிறந்த பிள்ளை... ஃபேஸ்புக்கில் சீமான் போட்ட சர்ச்சை கவிதை
சென்னை: "இந்தியா என்றொரு நாடு எப்போதும் இருந்ததில்லை... ஆம் இந்த இந்தியா வெள்ளையனுக்குப் பிறந்த பிள்ளை" என்று கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதையை தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் 'ஆடியோ- வீடியோவுடன்' நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பதிவிட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானின் அதிகாரப்பூர்வ முக நூல் பக்கம் https://www.facebook.com/senthamizhanseeman. இதில் "தினம் ஒரு செய்தி" என்ற தலைப்பில் நாள்தோறும் பல கவிஞர்களின் கவிதைகளை பதிவிட்டு அதற்கு ஏற்ப வீடியோ காட்சிகளை அமைத்து சீமானின் குரலில் கவிதை வரிகள் இடம்பெற்று வருகின்றன.
இன்று 'தினம் ஒரு செய்தி 81-ல்' கவிக்கோ அப்துல்ரகுமானின் கவிதை ஒன்றை சீமான் பகிர்ந்து வெளியிட்டிருக்கிறார். இந்தியாவை விமர்சிக்கும் இந்த கவிதையை சீமான் பதிவிட்டுள்ளது இப்போது சர்ச்சையாகி உள்ளது.
சீமான் பதிவிட்ட கவிதை:
வெள்ளையனுக்குக் குளிர் அடித்தது
துண்டுதுண்டாய்க் கிடந்த துணிகளை எடுத்து
ஒட்டுபோட்டுச் சட்டை தைத்து
அணிந்து கொண்டான் - அதை
இந்தியா என்றார்கள்!
கோடை வந்தது
புழுக்கம் தாளாமல் அவன் சட்டையைக்
கழற்றி எறிந்தான் - அதை
சுதந்திரம் என்றார்கள்.
சுதந்திரம் வாங்க தெரிந்தது
வைக்கத் தெரிந்ததா?
ஆங்கிலேயன் கொடுத்தது
சுதந்திரம் மட்டுமல்ல
இந்தியாவும்தான்.
இந்த எல்லைகளோடு
இந்தியா என்றொரு நாடு
எப்போதும் இருந்ததில்லை
ஆம்
இந்த இந்தியா
வெள்ளையனுக்குப் பிறந்த பிள்ளை - ஆனால்
நாம் தந்தை உரிமை கொண்டாடினோம்.
ஆங்கிலேயனின் சிலுவைக்குறி
நம்மைக் கூட்டும் குறியாக இருந்தது - ஆனால்
நாம் வாங்கிய சுதந்திரமோ
நம்மைச் சிலுவையில் அறைந்தது
அவன் கூட்டினான்
நாம் கழித்தோம்
அவன் தொகுத்தான்
நாம் வகுத்தோம்
சாதி என்றும் சமயம் என்றும்
விதவிதமான வகுத்தல்
இடையிலோர் ஈவும் இல்லை
இரக்கமும் இல்லை
- கவிக்கோ அப்துல் ரகுமான்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications