கொட்டும் மழையில் சீமான் பாடிய "ம.க.இ.க"வின் வந்தே மாதரம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : அப்துல் கலாம் நினைவு பொதுக்கூட்ட மேடையில் மழையையும் பொருட்படுத்தாமல் பேசிய சீமான், தனதுபாணியில் வந்தே மாதரம் பாடலைப் பாடினார்.

சென்னையில் நடைபெற்ற அப்துல்கலாம் நினைவு பொதுக்கூட்டத்தின் போது கொட்டும் மழையில் சீமான் பேசினார். நீதியரசர் ஒருவர் வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாட வேண்டும் என்று சொல்கிறார். திரையரங்குகளில் தேசப்பற்று பாடலைப் போடுகிறார்கள், டாஸ்மாக்கில் வந்தே மாதரம் பாடலைப் போட்டால் தேசப்பற்று நன்றாக வளர்ந்துவிடும்.

Seeman singed Vande Matharam in heavy rains

மக்கள் கலை இலக்கியக் கழகத்தினர் வந்தே மாதரம் பாடலை பாடியுள்ளனர். அதில்

வந்தே வந்தே மாதரம்

நொந்தே நொந்தே சாகரோம்

எங்க நாடு ஆகுது வல்லரசு

கலைஞர் அரிசி 2 ரூபாய் எங்க நாடு வல்லரசு

விடிஞ்சா கக்கூசுக்கு போக 4 ரூபாய் எங்க நாடு வல்லரசு

அப்போ கலைஞரு 2 ரூபாய்க்கு அரிசி கொடுத்தாரு, இனி ரேஷன் அரிசியும் கிடையாது.

பங்குச்சந்தை ஏறுது மேல எங்க நாடு வல்லரசு

வௌஞ்ச நெல்லு விலை ஊறுது கீழ எங்க நாடு வல்லரசு

வந்தே வந்தே மாதரம்

நொந்தே நொந்தே சாகரோம்

காலக் கொடுமை இனி எல்லாரும் இப்படி நொந்தே சாகவேண்டியது தான், இவ்வாறு பேசியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Naam thamizhar party organiser Seeman singed vande Matharam song in his style at heavy rains in the Abdul Kalam's memorial public meeting organised by the party.
Please Wait while comments are loading...