ஓட்டு போட போற பொண்ணே ஒதுங்கி நிக்காதே! காரைக்குடியில் பாட்டு பாடி வாக்கு சேகரித்த சீமான்
காரைக்குடி: ஓட்டு போட போற பொண்ணே ஒதுங்கி நிக்காதே கண்ட கண்ட சின்னங்களை கண்டு கலங்கி நிற்காத என பாட்டு பாடி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார்.
தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகள், புதுவையில் உள்ள ஒரு லோக்சபா தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர் என 4 முனை போட்டி நிலவி வருகிறது. அந்தந்த கட்சிகளின் அரசியல் தலைவர்கள், மூத்த நிர்வாகிகள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் , முன்னாள் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் என வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் நிலையில் 40 தொகுதிகளில் 20 ஆண்கள், 20 பெண்கள் என வேட்பாளர்களை அறிவித்திருந்தார். அவரது கடந்த முறை தேர்தலில் கரும்பு விவசாயி சின்னத்தல் போட்டியிருந்தது. இதனால் இந்த முறையும் கரும்பு விவசாயி சின்னம் கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில் அந்த சின்னம் கிடைக்கவில்லை .
தேர்தல் ஆணையமும் கரும்பு விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டுவிட்டதால் அதை தரவில்லை. இதையடுத்து சீமான் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டது. ஆனால் சீமானோ, தனது கட்சிக்கு படகு, பாய்மரம் ஆகியவற்றில் ஒரு சின்னத்தை ஒதுக்கக் கோரியது. ஆனால் அதையும் தேர்தல் ஆணையம் நிராகரித்த நிலையில் மைக் சின்னத்திலேயே போட்டியிடுவதாக சீமான் அறிவித்தார்.
இதையடுத்து அவர் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். அதில் மைக் இல்லாமல் யாருமே பேச முடியாது என தனது பிரச்சாரத்தை தொடங்கினார். இந்த நிலையில் அவர் சிவகங்கை தொகுதி வேட்பாளர் எழிலரசியை ஆதரித்து காரைக்குடியில் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் கூறுகையில் இந்தியாவில் தற்போது அரசியல் மலிவான வியாபாரமாக மாறிவிட்டது. தமிழ் பிள்ளைகள் நாங்கள் மலிவான அரசியலை செய்ய மாட்டோம். அதனால்தான் நாம் தனித்து போட்டியிடுகிறோம். கல்லூரிகளில் சேர மாணவர்களுக்கு தேர்வு வைப்பது போல் எம்பி, எம்எல்ஏ, முதல்வர், பிரதமர் ஆகவும் தேர்வு வைக்க வேண்டும்.
முக்கிய பதவிகளுக்கு தேர்வு வைத்திருந்தால் பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முக்கிய பதவிகள் கிடைத்திருக்காது. ஓட்டு என்பது வலிமையான ஆயுதம். இதுவரை செலுத்திய ஓட்டு உங்களுக்கு என்ன தந்தது என்பது எண்ணி பார்த்துவிட்டு வாக்களியுங்கள் என சீமான் பேசினார்.
பிறகு சீமான் ஒரு பாடலையும் பாடினார்.
ஓட்டுப் போட போற பொண்ணே ஒதுங்கி நிக்காத! கண்ட கண்ட சின்னங்களை கண்டு கலங்கி நிற்காத!
ஓட்டுப் போட போற ஐயா! ஓட்டுப் போட போற அம்மா! ஒதுங்கி நிற்காத! கண்ட கண்ட சின்னங்களை கண்டு கலங்கி நிற்காத!
உழைக்கும் மக்கள் சின்னம் இந்த ஒலிவாங்கி சின்னம்! நாள்தோறும் பாடுபட்டோம்! ஆனாலும் துன்ப பட்டோம்!
யார் யாருக்கோ ஓட்டு போட்டோம்! துன்ப பட்டோம்: இந்த நிலை மாற நான் வேற என்ன கூற
என்ற பாடலை பாடியபடியே வாக்கு சேகரிப்பில் சீமான் ஈடுபட்டிருந்தார்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications