கருணாநிதிக்கு பிறகு திமுகவும் உடையும்- சீமான் ஆருடம்
கருணாநிதிக்கு பிறகு திமுகவும் உடையும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
நாகப்பட்டினம்: வைகோவிற்கு வயதான காலத்தில் கண்டகண்ட கனவு வருகிறது. கருணாநிதிக்கு பிறகு திமுகவும் உடையும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
வேதாரண்யம் தாலுகா கரியாப்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசியதாவது:
அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடத்தான் நேரம் சரியாக இருக்கிறது. மக்கள் பிரச்சனை பற்றி அ.தி.மு.க.விற்கு அக்கறை இல்லை.

மீனவர்கள் பிரச்சினை
தமிழக மீனவர் மீது இலங்கை ராணுவம் எல்லை தாண்டி வந்து தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தான் எல்லை தாண்டி வந்தால் எல்லை தாண்டிய பயங்கரவாதம் என அறிவிக்கும் அரசு ஏன் இலங்கை ராணுவம் எல்லைத் தாண்டி மீனவர்களை தாக்கும் போது எல்லை தாண்டிய பயங்கரவாதம் என அறிவிக்கவில்லை.

ஹைட்ரோகார்பன் திட்டம்
கச்சத்தீவை மீட்க வேண்டும், ஹைட்ரோ கார்பன் திட்டம் கொண்டு வரப்பட்டால் தமிழகம் சோமாலியா போல் மாறிவிடும்.

திமுகவும் உடையும்
2 மாதமாக வைகோ கனவில் கருணாநிதி வந்தால் அதன்பேர் கனவா? வயதான காலத்தில் கண்டகண்ட கனவு வருகிறது. கருணாநிதிக்கு பிறகு தி.மு.க.வும் உடையும்.

அக்கறையில்லாத அரசு
நீட் தேர்வால் இனி தமிழன் யாரும் மருத்துவராக ஆக முடியாது. நீட் தேர்வு, விவசாயம், மீனவர் பிரச்சனை பற்றி அதிமுகவிற்கு அக்கறை இல்லை. அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடத்தான் நேரம் சரியாக இருக்கிறது. மாநில உரிமைகளை தமிழக அரசு படிப்படியாக பறிகொடுத்து விட்டது.
இவ்வாறு சீமான் பேசினார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications