நான் தீவிரவாதியா.. தமிழருவி மணியன் சொல்றதை எல்லாம் கண்டுகிறதில்ல… சீமான் பொளேர்
தமிழருவி மணியன் தன்னை தீவிரவாதி என்று சொன்னதை பொருட்படுத்தவில்லை என்று சீமான் கூறியுள்ளார்.
மதுரை: தமிழருவி மணியன், தன்னை தீவிரவாதி என்று சொன்னதை பொருட்படுத்தவில்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் இன்று காலை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசும் போது, மக்கள் குடிக்கக் கூட தண்ணீர் கிடைக்காமல் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அதிமுகவின் இரு அணிகளும் இந்தியா-சீனா போன்று சண்டை போட்டு கொண்டிருக்கிறார்கள் என்று கிண்டலடித்தார்.

மேலும், தமிழகத்தில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள் ஏராளமாக இருக்க, அதிமுக அணிகளின் பேச்சுவார்த்தை அர்த்தமற்றது என்றும் தொடர்ந்து இந்தப் பிரச்சனையை பார்ப்பதை விட்டுவிட்டு தமிழக மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்றும் சீமான் கூறினார்.
கீழடியில் 2600 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் வரலாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை முழுமையாக கண்டறிய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறிய சீமான், ஜான்சிராணிக்கு கொடுத்த முக்கியத்துவத்தை வேலுநாச்சியாருக்கு கொடுக்கவில்லை என்று கூறினார்.
இதனிடையே, தமிழருவி மணியன், சீமான் ஒரு தீவிரவாதி என்று கூறியுள்ளாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்த சீமான், மக்கள் இயக்க தலைவர் தமிழருவிமணியன் என்னை தீவிரவாதி என்று கூறியதை பொருட்படுத்தவில்லை என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications