டிடிவி தினகரனை மட்டும் கைது செய்தது ஏன்? ....தமிழர்கள் இளிச்சவாயர்களா? - சீமான்
டிடிவி தினகரனை மட்டும் கைது செய்தது ஏன் தமிழர்கள் இளிச்சாவாயர்களா? என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் கூறியுள்ளார்.
சென்னை: தமிழர்களை இளிச்சவாயர்கள் என்று நினைத்துக்கொண்டு மத்திய அரசு பல தில்லுமுல்லு வேலைகளைச் செய்து வருகிறது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக யாரோ ஒருவன் கூறியதை வைத்து தினகரனை கைது செய்தது என்றும் அவர் கேட்டுள்ளார்.
இரட்டை இலைக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் டிவி தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
டெல்லியில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்ட டிடிவி தினகரனை பெசன்ட் நகரில் வைத்து விசாரணை நடத்தினர். அவரது மனைவியிடமும் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டிடிவி தினகரன் வீட்டிற்கு ஆதரவாளர்கள் அதிகம் வருவதில்லை. நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட சிலர் மட்டுமே வந்து செல்கின்றனர். ஆனால் செய்தியாளர்கள் கூட்டம் அதிகம் உள்ளது.

டிடிவி தினகரன் ஆதரவு
டிடிவி தினகரன் பற்றிய எதிர்மறையாக செய்திகள் ஊடகங்களில் வெளியாவதால் அதிமுக தொண்டர்களுக்காக சில ஆதரவாளர்களைப் பிடித்து அவர்களின் பேட்டிகளை ஒளிபரப்புகின்றனர். அவர்களும் தினகரனுக்கு ஆதரவான கருத்துக்களை கூறி வருகின்றனர்.

வழக்கு போட்டு நியாயமா?
இதனிடையே டிடிவி தினகரன் கைது அதைத் தொடர்ந்து நடைபெறும் விசாரணை பற்றி கருத்து கூறியுள்ள நாம் தமிழர் கட்சியின் சீமான், எனவோ ஒரு கேடிப்பயல் சொன்னதை வைத்து டெல்லி போலீஸ் வழக்கு போட்டிருப்பது நியாயமற்றது என்று கூறியுள்ளார்.

சித்து விளையாட்டு
கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய அவன் கூறியதை வைத்து வழக்கு போடுவது முறையாகாது. தமிழர்களை இளிச்சவாயர்கள் என்று நினைத்துக்கொண்டு மத்திய அரசு சித்து விளையாட்டு விளையாடுகிறது.

தமிழர்கள் முட்டாள்களா?
தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றார் என்றால், அந்த லஞ்சப்பணத்தை வாங்க முயன்ற அதிகாரி யார் என்ற தகவலை வெளியிடாதது ஏன் ? தமிழர்களை முட்டாள்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்களா? என்றும் சீமான் கேட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications