மலையாளி, மார்வாடி கொடுத்தா பைனான்ஸ்.. தமிழன் கொடுத்தா கந்துவட்டியா?: சீமான் சாடல்
சர்ச்சைக்குரிய பைனான்சிஸியர் அன்பு செழியனுக்கு சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: மலையாளி, மார்வாடிகள் கொடுப்பதற்கு பைனான்ஸ் என்றும் தமிழன் கொடுப்பதற்கு கந்து வட்டி என்றும் பெயரிட்டு அழைப்பதா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சாடியுள்ளார்.
இது தொடர்பாக சீமான் கூறியதாவது:
வட்டியில் என்ன கந்து வட்டி? அந்த வட்டி? இந்த வட்டி? மலையாளிகள், மார்வாடிகள் கொடுத்தால் அதற்கு பேரு பைனான்ஸ்... தமிழன் கொடுத்தால் கந்து வட்டியா?
முத்தூட் பைனான்ஸ் என்றுதான் போடுகிறீர்கள்.. முத்தூட் கந்து வட்டி என்றா போடுகிறீர்கள்? எங்க இருந்து இந்த வார்த்தையை கண்டுபிடிக்கிறீங்க?

வட்டி வாங்கும் கட்டாயம்
வட்டி என்பது வட்டிதான்... ஏழை எளிய மக்கள் உழைக்கும் மக்கள் குறைந்த வட்டியில் கடன் பெறுவதற்கு அரசு ஏதேனும் திட்டம் வைத்திருக்கிறதா? எதுவும் இல்லாத மக்கள் பிள்ளைகளை படிக்க வைக்க என்ன செய்வார்கள்? பிள்ளையை கட்டி கொடுக்க ரூ5 லட்சம் வேண்டும் என்றால் என்ன செய்வார்கள்? வட்டிக்குத்தான் வாங்க முடியும்.

நீங்க வைக்கிற பெயர் கந்துவட்டி
அந்த வட்டிக்கு நீங்க வைக்கிற பெயர் கந்து வட்டி. இவ்வளவுதான் வட்டி கொடுக்க வேண்டும் என அரசு முறைப்படுத்துமா? உரிய சட்டம் கொண்டு வருமா?
கடனை அடைத்தேன்
நானே என் தம்பி ராசு மதுரவனுக்கு ரூ20 லட்சம் வட்டிக்கு வாங்கி கொடுத்தேன்..அதுக்கு பின்னாடிதான் முத்துக்கு முத்தாக படமே வெளிவந்தது. ராசு மதுரவன் இறந்ததால் நானும் தம்பி சிவகுமாரும் அந்த கடனை சிறு சிறுக அடைத்தோம்.
பல கோடி ரூபாய் இழந்த அன்பு
உண்மை நிலையைச் சொன்னால் அன்பு செழியன் இல்லையெனில் இங்கே பலபேர் திரைப்படமே எடுக்க முடியாது. அன்புச் செழியன் யாரிடமும் என்கிட்ட வந்து பணம் வாங்கு என கூறவில்லை. நாமதான் விரும்பிப் போய் வாங்குகிறோம். பல சாமானியர்களை நம்பி அன்பு செழியன் பல கோடி ரூபாய் பணம் கொடுத்திருக்கிறார். அரசு வங்கியே ரூ1 லட்சம் கடனுக்கு கட்டி வைத்து அடிக்கவில்லையா? கடனை கொடுத்தவர் கேட்கிற முறையில் கடுமை கேட்கிற போது தன்மான இழப்பாக கருதி உயிரிழப்பு ஏற்படுகிறது. அன்பு செழியன் போன்றவர்கள் பணம் கொடுக்க முடியாது என கூறிவிட்டால் திரைப்படமே எடுக்க முடியாத நிலைதான் உருவாகும்.
இவ்வாறு சீமான் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications