முதல்வர் ஓபிஎஸ்-க்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு- சசிக்கு எதிர்ப்பு: சீமான்
முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை ஆதரிப்பதாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்: தமிழக முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் தொடர ஆதரிப்போம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது:
தமிழக முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பதவியில் தொடர்ந்து நீடிக்க நாம் தமிழர் கட்சி ஆதரவளிக்கிறது. முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் போல சசிகலாவால் செயற்பட முடியாது.

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான அப்பல்லோவின் புதிய விளக்கங்கள் சந்தேகத்தை அதிகரிக்க வைத்துள்ளது. ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு காலம்தாழ்ந்தது.
இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications