செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனப் பணியாளர்களின் உண்ணாவிரதத்தில் சீமான்
சென்னை: 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வரும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனப் பணியாளர்களுக்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனப் பணியாளர்கள் சங்கம் 10 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து தொடர் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வருகின்றனர். முதல் இரண்டு நாள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். நிர்வாகமோ, மத்திய, மாநில அரசுகளோ பேச்சுவார்த்தைக்கு முன்வராத நிலையில் போராட்டத்தின் மூன்றாம் நாளிலிருந்து தொடர் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இது குறித்து பணியாளர்கள் சங்கத் தலைவர் முனைவர் அ.ஆரோக்கியதாசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
பணி நிரந்தரம், தினக்கூலி முறைமையை முற்றிலுமாக ஒழித்தல், பேறுகாலத்திற்குச் சென்றமைக்காக பணிநீக்கம் செய்யப்பட்ட திருமதி. கல்பனா என்ற பணியாளரை மீண்டும் பனியில் சேர்த்தல், தமிழறிஞரை நிரந்தர இயக்குநராக நியமித்தல், நிதியை முழுமையாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை மையப்படுத்தி பணியாளர்கள் தொடர்ந்து 7வது நாளாக தொடர் உன்ணாநிலையிருந்து வருகின்றனர். ஆனால் மத்திய, மாநில அரசுகளோ நிர்வாகமோ இதுவரை முறையான பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
தமிழகத்தின் தமிழ் இயக்கங்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் தலையிட்டு நிர்வாக அதிகாரிகளிடம் நடத்திய பேச்சுவார்த்தையின்படி பணியாளர்களின் கோரிக்கை நிர்வாகத் தரப்பில் பேசப்பட்டது. பணியாளர் சங்கம், நிர்வாகம், தமிழ் இயக்கங்கள் முன்னிலையில் பேச்சப்பட்ட பேச்சுவார்த்தையின் உடன்பாட்டு ஒப்பந்தம் பேசியபடி நிர்வாகத் தரப்பில் கொடுக்காததால் இன்று(நேற்று) முடிவிற்கு வரயிருந்த உண்ணாநிலை அறப்போராட்டம் மீண்டும் தொடர்கிறது.
உடன்பாட்டு ஒப்பந்தம் எழுத்துப்பூர்வமாக கிடைக்கும் வரை இப்போராட்டம் தொடரும். முன்னுக்குப்பின் பிறழ்ந்து பிறழ்ந்து பேசிவரும் நிர்வாகத்தைக் கண்டித்தும் ஒப்பந்தத்தை கொடுக்க வலியுறுத்தியும் பணியாளர்கள் சங்கத்திற்கு ஆதரவாக 28.10.2013 அன்று காலை பல்வேறு தமிழமைப்புகளும் தொழிலாளர் இயக்கங்களும், நாம் தமிழர் கட்சியும் இன்னும் பிற இயக்கங்களும் நிர்வாகத்தைக் வழியுறுத்த இருக்கின்றனர். எனவே பணியாளர்களின் அடிப்படை வாழ்வுரிமைக் கோரிக்கைகளையும் தமிழினக் கோரிக்கைகளையும் மத்திய மாநில அரசுகள் தலையிட்டு நிறைவேற்றித் தர முன் வர வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றோம்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications