சிம்பு மன்னிப்பு கேட்டால் மன்னித்து மறந்துவிடலாம்: சீமான்
சென்னை: சிம்பு மன்னிப்பு கேட்டால் பீப் பாடலை மன்னித்து, மறந்து விடலாம் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய பீப் பாடல் வழக்கில் பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இன்னும் முற்றுப்புள்ளி பெறாத இந்த விவகாரம் குறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் கூறும்போது "பீப் பாடல் தவறானது. இதற்காக தமிழக மக்களிடம் சிம்பு மன்னிப்பு கேட்க வேண்டும்.

இந்த விஷயத்தில் நடிகர் சிம்பு மன்னிப்பு கேட்டால், அவரை மன்னித்து இந்த பீப் பாடலை மறந்து விடலாம்" என்று தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக தமிழக மக்களை மழை, வெள்ள பாதிப்புகளில் இருந்து இந்த விவகாரம் திசை திருப்புகிறதா? என்ற கேள்விக்கு "இந்த ஒரு பாட்டு மக்களை திசை திருப்பும் என்று நான் நினைக்கவில்லை.
இலங்கையில் நமது மக்களின் இனப்படுகொலையின் போது பதறாத மக்கள், இந்த ஒரு பாடலுக்கு இவ்வளவு பதறுகிறார்களே என்பதை நினைக்கும் போது சற்று வேதனையாக உள்ளது.
இந்தப் பாடலை கேட்காவிட்டால் நாளடைவில் மறைந்து விடும். இதனை இவ்வளவு பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டு பேச வேண்டியதில்லை.
ஆனால் ஒரு பாடல் இவ்வளவு பெரிய செயலை திசை திருப்பி விடும் என்று நான் நினைக்கவில்லை" என்று சீமான் கருத்துத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
