டெபாசிட் இழந்த பாஜக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள்... சீமான், தமிழிசையும் தப்பவில்லை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை 232 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி சீமான் உட்பட வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட்டை பறிகொடுத்துள்ளனர். இதேபோல சட்டசபை தேர்தலில் தனி அணியாக களமிறங்கிய பாஜக வேட்பாளர்களும் டெபாசிட்டை இழந்துள்ளனர். பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் இதில் தப்பவில்லை.

ஒரு தொகுதியில் பதிவான வாக்குகளை விட 6ல் ஒரு பங்கு வாக்குகளை பெறும் வேட்பாளர்களுக்கு மட்டுமே அவர்கள் கட்டிய டெபாசிட் தொகை திரும்ப அளிக்கப்படும். முதன்முறையாக இந்த சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி களமிறங்கியது. இந்த தேர்தலில் 232 தொகுதிகளில் மொத்தம் 4, 58,104 வாக்குகள் பெற்றது நாம் தமிழர் கட்சி. மொத்தம் 1.1% வாக்குகளை பெற்றுள்ளது நாம் தமிழர் கட்சி

Seeman and Tamilisai loss Deposit

நாம் தமிழர் கட்சியின் முதல்வர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தப்பட்ட சீமான், கடலூர் தொகுதியில் போட்டியிட்டார் அந்த தொகுதியில் அவர் 12,497 ஓட்டுகள் மட்டுமே பெற்று 5வது இடத்திற்கு தள்ளப்பட்டதோடு டெபாசிட்டை இழந்தார்.

இதேபோல நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட்டை பறிகொடுத்தனர்.

தமிழகத்தில் தனி அணியாக போட்டியிட்ட பாஜக 157 தொகுதிகளில் வேட்பாளர்களை களமிறக்கியது. இதில் குமரி, கோவை மாவட்டங்களைத் தவிர வேறு எந்த மாவட்டங்களிலும் குறிப்பிடத்தகுந்த அளவில் பாஜக வேட்பாளர்கள் பெறவில்லை.

பாஜக இந்த தேர்தலில் மொத்தம் 12,28, 692 வாக்குகளை பெற்றுள்ளது. இது மொத்தம் பதிவான வாக்குகளில் 2.8% ஆகும்.

சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் 19,167 வாக்குகளை பெற்று, டெபாசிட்டை பறிகொடுத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+