சென்னை பல்கலைக்கழகத்தில் சாதி மோதலை ஏற்படுத்தும் பாடங்களை நீக்க வேண்டும்: சீமான்

இது குறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னைப் பல்கலைக் கழகத்தின் 2013-14 கல்வி ஆண்டுக்கான இளங்கலை படிப்புக்கான பொது தமிழ் மொழிப் பாடத்திட்டத்தில் புதுமைப்பித்தன் எழுதிய "துண்பக்கேணி" சிறுகதையும், வண்ணநிலவன் எழுதிய "கடல்புரத்தில்" புதினமும் இணைக்கப்பட்டுள்ளது.
இவ்விரண்டுமே சாதிய அடிப்படையில் வன்மத்தையும் வெறுப்பையும் ஏற் படுத்தும் கதை பாத்திரங்களையும், சொல்லாடல்களையும் கொண்டுள்ளவை. ஒரு குறிப்பிட்ட சாதியினரை இழிவு படுத்தும் விதத்தில் ஒழுக்கமற்றவர்களாக கதை பாத்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு சாதி அடிப்படையிலான பிரிவினையையும் வெறுப்பையும் வளர்க்கும் எழுத்துக்கள், இலக்கியங்கள் என்ற போர்வையில் மாணவர்களின் பாடத்திட்டத்திற்குள்ளேயே இணைக்கப்படுமானால், அது எதிர்கால சமூகத்தை பிளவுப்படுத்து வதிலும், மாணவர்கள் மனதில் சாதிய நஞ்சை ஆழ விதைப்பதிலுமே முடிவுறும்.
சட்டப்படி இரு சமூகத்தினரிடையே வெறுப்பையும் விரோதத்தையும் ஏற் படுத்தக் கூடிய எழுத்துக்களும் பேச்சுக்களும் பொது வெளியில் தடை செய்யப் பட்டுள்ள நிலையில், பாடத்திட்டத்தில் அவற்றை இணைப்பது சட்ட விரோத மானதாகும்.
அதிலும் குறிப்பிட்ட சாதியினரை அச்சாதியின் பெயரைக் குறிப்பிட்டே இழிவான சொற்களால் குறிப்பிடப்படுவதையும், அச்சாதியைச் சேர்ந்த பெண்கள் ஒழுக்கமற்றவர்கள் என்று குறிப்பிடப் படுவதையும் எவ்வாறு மாணவர்கள் படிக்க இயலும்? அச்சாதியைச் சேர்ந்த மாணவர்கள் குறுகிப் போய் நிற்பதற்கும் பிற மாணவர்கள் அவர்களை கேலி பேசுவதற்குமே இது வழிவகுக்கும்.
இதனால் மாணவர்களிடையே சாதி மோதல் உருவாகவும் வழியுள்ளது. அதற்கு பல்கலைக்கழகம் பொறுப்பேற்குமா? எனவே இக்கதைகளை உடனடியாக பாடத்திட்டத்திலிருந்து நீக்க வேண்டுமென பல்கலைக் கழக நிர்வாகத்தை சீமான் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications