போயஸ் கார்டன் +ஓ.பி.எஸ்ஸுக்கு நெருக்கமான சேகர் ரெட்டிக்கு ஜாமீன் மறுப்பு!
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சேகர்ரெட்டியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
சென்னை: சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சேகர்ரெட்டியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சீனிவாசலு, பிரேம்குமார் ஆகியோரின் ஜாமீன் மனுக்களையும் சென்னை சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அதேநேரத்தில் சேகர் ரெட்டி கூட்டாளிகளான திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன் ஆகியோர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்த தொழிலதிபர் ஜெ.சேகர் ரெட்டி, இவர் போயஸ் கார்டனுக்கு நெருக்கமானவர் ஆவர். இவரது வீட்டின் இவரின் கூட்டாளிகள் வீட்டிலும், கடந்த டிசம்பர் மாதம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில், ரூ.147 கோடி பணம், 178 கிலோ அளவுக்கு தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதைத் தொடர்ந்து, ரூ.34 கோடிக்கு புதிய ரூபாய் நோட்டுகளை பதுக்கியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பேரில், சேகர் ரெட்டி, கே.சீனிவாசலு, பிரேம்குமார், திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன் ஆகிய 5 பேரை சிபிஐ போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் சேகர்ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார் ஆகிய 3 பேரின் ஜாமீன் மனுவை சென்னை சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
அதேநேரத்தில் சேகர் ரெட்டி கூட்டாளிகளான திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன் ஆகியோர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தினமும் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் சிபிஐ நீதிமன்றம் இருவரையும் ஜாமீனில் விடுவித்துள்ளது.
-
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications