கர்நாடகா சுயநலத்துடன் செயல்படுகிறது.. அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடப்பாடியார் குற்றச்சாட்டு!
கர்நாடகா சுயநலத்துடன் செயல்படுகிறது என அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.
Recommended Video

சென்னை: கர்நாடகா சுயநலத்துடன் செயல்படுகிறது என அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.
காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பின் மீதான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக தமிழக அரசு சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், சீமான், வைகோ, ஜிகே வாசன், திருமாவளவன், பாமக சார்பில் ஏகே மூர்த்தி, தேமுதிக சார்பில் சுதீஷ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

முதல்வர் தலைமையில்
இந்த அனைத்துக்கட்சி கூட்டம் கருணாநிதி முதல்வராக இருந்த காலத்திற்கு பின் 11 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறுகிறது.

முதல்வர் குற்றச்சாட்டு
இந்நிலையில் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கர்நாடகத்தின் சுயநலம் தான் காவிரி பிரச்சனை உருவாக காரணம் என்று குற்றம்சாட்டினார்.

விதிகளை மீறி அணைகள்
கர்நாடகத்தின் சுயநலப்போக்கு இன்றுவரை மாறவில்லை என்று தமிழக முதல்வர் பேசியுள்ளார். விதிகளை மீறி கர்நாடக அரசு அணைகள் கட்டியதாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் முதல்வர் கூறினார்.

தமிழகத்தின் உரிமை
மேலும் காவிரியில் தமிழகத்தின் உரிமையை அரசு விட்டுக்கொடுக்காது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
-
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்!












Click it and Unblock the Notifications