அமைச்சர் செல்லூர் ராஜூ வீட்டுல விசேசங்க- மொய் வசூல் எவ்வளவு தெரியுமா?
மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ வீட்டு காது குத்து விழாவில் கோடிக்கணக்கில் மொய் பணம் வசூலானதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video

சென்னை: கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வீட்டு காது குத்து விழா மிக பிரம்மாண்டமாக இரு தினங்களுக்கு முன்பு மதுரையில் நடைபெற்றது. இந்த விழாவில் 2 கோடி அளவிற்கு மொய் பணம் வசூலாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை பக்கத்தில் காது குத்து, கிடா வெட்டு என்றால் தாய்மாமன் வீட்டு சீர் வரிசை களைகட்டும். அதுவும் அமைச்சர் வீட்டு விசேசம் என்றால் கேட்கவா வேண்டும்.
ஞாயிறன்று மதுரையே திருவிழாக்கோலம் பூண்டது. சீர் வரிசை தட்டுக்கள் களை கட்டின. முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்றனர்.

தாய்மாமன் சீர்
அமைச்சர் செல்லூர் ராஜூ வீட்டு விசேசத்தில் பங்கேற்றவர்கள் கொண்டு வந்த சீர் வரிசையை பார்த்து மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.
|
முதல்வர், துணை முதல்வர்
இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்று குழந்தைகளை வாழ்த்தினர். மாலை அணிவித்து பரிசுப்பொருட்களை கொடுத்தனர்.

அசைவ உணவு விருந்து
காது குத்து விழா என்றாலே கிடா வெட்டு அசைவ விருந்து களை கட்டும். அதுவும் அமைச்சர் வீட்டு விஷேசத்தில் கேட்கவா வேண்டும். வந்திருந்த அனைவருக்கும் கிடா வெட்டு விருந்து, அசைவ உணவுகள் பரிமாறப்பட்டன.

லட்சம் லட்சமாக வசூல்
சீர் செய்தது ஒரு பக்கம் ஆச்சரியப்படுத்த, வந்திருந்த அங்காளி, பங்காளி உறவினர்கள் எல்லாம் லட்சங்களில்தான் மொய் செய்தார்களாம். மொய் பணம் மட்டும் 2 கோடிக்கு வசூலானதாக சொல்கிறது புள்ளி விபரம். மொத்தத்தில் காது குத்து விழா வெகு ஜோராக நடத்தி விட்டார் அமைச்சர் செல்லூர் ராஜூ.
-
"எங்கே சென்றது சிங்கப்பெண் அதிரடி படை?" கும்மிடிப்பூண்டி வழக்கில் இபிஎஸ், அன்புமணி கண்டனம் -
அந்த மூவரையும் சேர்க்காதீங்க.. தடுக்கும் நிர்மல்குமார்.. மதுரை தவெகவில் நடப்பது என்ன? -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications